48 பால்.. 17 ரன்.. 4 விக்கெட்.. அவரு பயந்த மாதிரியே நடந்திடுச்சி – தெறிக்கவிட்ட தமிழக வீரர் அஷ்வின்

Ben-Duckett
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதி இன்று ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் விக்கெட்டாக இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான பென் டக்கெட்டை தமிழக வீரர் அஸ்வின் சாய்த்து அசத்தினார். அதன்படி இந்த போட்டியில் 39 பந்துகளை சந்தித்திருந்த பென் டக்கெட் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்த இவரை அஸ்வின் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழக்க வைத்து அசத்தினார். 55 ரன்களில் இருந்த போது முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து 58 மற்றும் 60 ரன்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டை இழந்தது.

இருப்பினும் நான்காவது விக்கெட்டுக்கு தற்போது இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பென் டக்கெட்டை தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இதுவரை பென் டக்கெட்டிற்கு எதிராக 48 பந்துகளை மட்டுமே வீசியுள்ள அவர் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்காவது முறையாக அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பேட்டியளித்த பென் டக்கெட் கூறுகையில் :

இதையும் படிங்க : 55/0 டூ 60/3 என இங்கிலாந்தை தெறிக்க விடும் ஜடேஜா – அஸ்வின் ஜோடி.. கும்ப்ளே – ஹர்பஜனை மிஞ்சி தனித்துவ சாதனை

நிச்சயம் இந்த தொடரில் அஸ்வின் என்னை சிலமுறை ஆட்டமிழக்க வைப்பார்.. இந்திய ஆடுகளங்களில் அவர் ஆபத்தானவராக இருப்பார் என்பதால் அவரை சமாளித்து விளையாடப்போகிறேன் என்று கூறியிருந்த வேளையில் அவர் பயந்தது போன்றே இம்முறையும் அஸ்வின் அவரை ஆட்டமிழக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement