- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா ஜெய்க்க 100% வாய்ப்பே இல்ல.. அரைகுறை கனவையும் ரோலர்ல நசுக்கிடுவோம்.. ரூட் வெளிப்படை

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது. அப்போட்டியில் 374 ரன்கள் இலக்கை துரத்தும் இங்கிலாந்து நான்காவது நாள் முடிவில் 336/6 ரன்களை எடுத்துள்ளது. கைவசம் 4 வைத்துள்ள அந்த அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

மறுபுறம் இந்தியா வெற்றி பெறுவதற்கு 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அதன் காரணமாக இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் 10 – 15 நிமிடங்களுக்குள் 4 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே கணிக்க முடியாத கிரிக்கெட்டில் இந்தியா அந்த மேஜிக்கை செய்து வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

ஜெய்க்க வாய்ப்பில்லை:

எனவே கடைசி நாளில் இந்திய அணி கடைசியாக ஒருமுறை முழு மூச்சுடன் பவுலிங் செய்து வெற்றி பெற முயற்சிக்க உள்ளது. ஆனால் விதிமுறைப்படி கடைசி நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாக எந்த வகையான உருளையை பயன்படுத்தலாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை பேட்டிங் செய்யும் அணி என்ற முறையில் இங்கிலாந்து பெற்றுள்ளது. அதன் படி இங்கிலாந்து கனமான உருளையை பிட்ச் மேலே பயன்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

போட்டித் துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அந்த உருளை பயன்படுத்தப்படும். அப்படி செய்யும் போது பிட்ச்சில் இருக்கும் சமமற்ற பகுதிகள் சமமாக்கப்படும். அதன் காரணமாக பிட்ச் ஃபிளாட்டாக மாறி பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 100% வாய்ப்புகள் இல்லாத நிலைமை ஏற்படும்.

- Advertisement -

உறுதி செய்த ரூட்:

அதை நேற்றைய நாளின் முடிவிலேயே இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உறுதி செய்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உருளையைப் பொறுத்த வரை நாங்கள் பார்க்க வேண்டும். துரதிஷ்டவசமாக நான் துல்லியமான பந்தில் அவுட்டாகவில்லை. ஆனால் அது (பிட்ச்) இந்தப் போட்டியில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது”

இதையும் படிங்க: இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியை தாண்டி கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை – பேட்டிங்கில் இல்ல

“5வது நாளில் அது மாறுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். இருப்பினும் அது எங்களுடைய விஷயங்களை ஃபிளாட்டாக மாற்றுவதற்கு தகுந்தார் போல் வேலை செய்யும் என்று நம்புகிறோம்” என கூறினார். இதிலிருந்து கடைசிப் போட்டியில் மேஜிக் வெற்றியைப் பெறுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இந்திய ரசிகர்களின் அரைகுறை கனவு, இன்று ஓவல் மைதானத்தில் பயன்படுத்தப்பட உள்ள கனமான உருளையின் (ஹெவி ரோலர்) கீழ் நசுங்கப்போவது இப்போதே தெரிவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -