இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் வெளியேறி உள்ளார்.
விராட் கோலியை முந்திய கே.எல் ராகுல் :
அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கும் அவர் 2029 ஒருநாள் உலக கோப்பை தொடரோடு ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 36 வயதை எட்டியுள்ள அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்.
விராட் கோலி இல்லாமல் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு எவ்வாறு செயல்படும்? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது வரை இந்திய அணியில் செயல்பாடு அங்கு சிறப்பாகவே இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தற்போதைய இந்திய அணியின் அனுபவ வீரராக இருக்கும் கே.எல் ராகுல் தனது முதிர்ச்சியான செயல்பாட்டை இங்கிலாந்து தொடரில் வெளிப்படுத்தி உள்ளார். பேட்டிங்கில் அற்புதமான பார்மை தொடர்ந்து வரும் அவர் 500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும் வேளையில் தற்போது கேட்ச்சிங்கிலும் விராட் கோலியின் சாதனை ஒன்றிணை தகர்த்து அசத்தியுள்ளார்.
அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த இங்கிலாந்து தொடரில் ஸ்லிப் பீல்டராக நிற்கும் அவர் பல கேட்ச்களை வெகு சிறப்பாக பிடித்திருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக கேட்ச்களை பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : அந்த கேட்சை பிடிச்சிருந்தா இந்தியா டாப்ல இருந்திருக்கும்.. பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட – முகமது சிராஜ்
இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 35 கேட்ச்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 30 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 25 கேட்ச்களுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் பென் டக்கெட் கொடுத்த கேட்சை பிடித்திருந்த கே.எல் ராகுல் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 26 கேட்ச்களுடன் இங்கிலாந்து மண்ணில் அதிக கேட்ச்களை பிடித்து வீரராக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.



