ENG vs BAN : 36 வயதிலும் மாலன் சாதனை.. ஆல் டைம் சாதனை படைத்த ரூட்.. வங்கதேசத்தை விளாசிய இங்கிலாந்து

David Malan
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. காலை 10.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் ஜானி பேர்ஸ்டோ 52 (59) ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் தொடர்ந்து அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

சாதனை பட்டியல்:
நேரம் செல்ல செல்ல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 38 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 140 (107) ரன்கள் விளாசி அவுட்டானார். அத்துடன் 36 வருடம் 37 நாட்களில் சதமடித்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் அதிக வயதில் பதிவு செய்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார். அது போக இது வரை 23 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் தன்னுடைய 6வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6 சதங்கள் அடித்த வீரர் என்ற அதிரடியான சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் 27 இன்னிங்ஸில் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 20 (15) ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் தொடர்ந்து தம்முடைய பங்கிற்கு கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோ ரூட் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 82 (68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்த ரன்களையும் சேர்த்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற ஆல் டைம் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதுவரை 19 போட்டிகளில் அவர் 898* ரன்கள் குவித்து இந்த சாதனை படைத்துள்ள நிலையில் இதற்கு முன் ஜாம்பவான் கிரஹாம் கூஜ் 21 போட்டியில் 897 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: IND vs AFG : இந்தியா – ஆப்கன் போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? – விரிவான அலசல்

அவரை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஹரி ப்ரூக் 20, லியம் லிவிங்ஸ்டன் 0, சாம் கரண் 11 ரன்களில் அதிரடியாக விளையாடும் முயற்சியில் விக்கெட்களை இழந்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திய இங்கிலாந்து 364/9 ரன்கள் குவித்து அசத்தியது. மறுபுறம் சுமாராகவே பந்து வீசிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகிதி ஹசன் 4 விக்கெட்டுகளையும் சோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

Advertisement