IND vs AFG : இந்தியா – ஆப்கன் போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? – விரிவான அலசல்

IND vs AFg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதை தொடர்ந்து 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இந்தியா தங்களுடைய 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்க தயாராகியுள்ளது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியாவின் பேட்டிங் துறையில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்பட்டாலும் ரோகித் சர்மா, இசான் கிசான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் பேட்டிங் துறையை வலுப்படுத்துகின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியில் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் இந்தியாவை நங்கூரமாக நின்று வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
மேலும் ஆஸ்திரேலியா அளவுக்கு ஆப்கானிஸ்தான் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதால் முதல் போட்டியில் இருந்த தடுமாற்றம் இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருக்காது என்றே சொல்லலாம். அத்துடன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக ஆப்கானிஸ்தானுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று நம்பலாம். அதே போல குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் நல்ல ஃபார்மில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடிக்க தயாராக இருக்கின்றனர்.

அது போக பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் அடிக்கும் அளவுக்கு தாக்கு பிடிப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியில் ரசித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய சுழல் பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பது பலமாகும். இருப்பினும் நவீன்-உல்-ஹக், பரூக்கி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உச்சகட்ட சவாலை கொடுப்பவர்களாக இல்லை.

- Advertisement -

அதே போல ஆல் ரவுண்டர்கள் துறையில் அனுபவ வீரர் முகமது நபியை தவிர்த்து வேறு வீரர்கள் தரமாக இல்லை. இருப்பினும் பேட்டிங் ரஹமத்துல்லா குர்பஸ், இப்ராகிம் ஜாட்ரான், நஜிபுல்லா ஆகியோர் இந்திய பவுலவர்களுக்கு ஓரளவு சவாலை கொடுப்பார்கள் என்று நம்பலாம். எனவே சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கும் இந்தியா ஏற்கனவே ஆஸ்திரேலியாவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் இப்போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் என்று உறுதியாக சொல்லலாம்.

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 2 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கும் நிலையில் 1 போட்டி டையில் முடிந்தது. ஆப்கானிஸ்தான் ஒரு முறை கூட வென்றதில்லை. மேலும் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த 1 போட்டியிலும் ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்துள்ளது.

இதையும் படிங்க: IND vs AFG : இந்தியாவின் வெற்றிநடை தொடருமா? டெல்லி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

2. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக கேஎல் ராகுல் 90 ரன்களுடன் திகழ்கிறார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக விராட் கோலி (67 ரன்கள்) திகழும் நிலையில் அதிக விக்கெட்கள் (7) மற்றும் சிறந்த பவுலிங்கை (4/30) பதிவு செய்த இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 252/7 ரன்களாகும்.

Advertisement