
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2025-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனுக்கான வேலைகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதன் முதற்கட்டமாக ஐபிஎல் நிர்வாகம் இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? என்பது குறித்த தகவலும் வெளியாக இருக்கிறது.
இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் உரிமையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஐபிஎல் தொடருக்கான விதிகளையும் பி.சி.சி.ஐ வெளியிட உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் தக்க வைக்கும் வீரர்கள், வெளியேற்றும் பட இருக்கும் வீரர்களையும் பட்டியலையும் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயதை எட்டியுள்ளதால் அடுத்த ஆண்டு அவர் அந்த அணியில் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது அந்த அணியின் நிர்வாகத்திற்கே இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் விரைவில் தோனி அந்த அணியில் இருந்து விலகும் பட்சத்தில் தோனியின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் குறித்த தேடலையும் சிஎஸ்கே அணி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணி தோனி ஒருவேளை அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவை வாங்க முனைப்பு காட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் பஞ்சாப் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யக்கூடியவர். தோனியும் பினிஷர் என்பதனால் அதேபோன்ற ஒரு வீரரை சிஎஸ்கே அணி வாங்க நினைக்கும் அந்த வகையில் பார்க்கையில் விக்கெட் கீப்பர் ஃபினிஷராக சிறப்பாக விளங்கும் ஜிதேஷ் சர்மாவை அவரது இடத்தில் வாங்க போட்டி போட வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : போட்டியில் தோற்றாலும் தென்னாப்பிரிக்க அணி சார்பாக உலக சாதனை நிகழ்த்திய இளம் வீரர் – விவரம் இதோ
கடந்த ஆண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜிதேஷ் சர்மா இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.