போட்டியில் தோற்றாலும் தென்னாப்பிரிக்க அணி சார்பாக உலக சாதனை நிகழ்த்திய இளம் வீரர் – விவரம் இதோ

Maphaka
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

18 வயது வீரர் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 176 குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அறிமுகமாகி விளையாடிய அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான மாபாகா அறிமுக போற்றியிலேயே வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : தென்னாப்பிரிக்க அணிக்காக மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார். இந்த போட்டியில் அவர் அறிமுகமானபோது சரியாக 18 வயது 137 நாட்கள் (புள்ளி விவரத்துடன் கணக்கிடப்பட்டது).

- Advertisement -

இதற்கு முன்னதாக கடந்த 1999-ஆம் ஆண்டு பென்யோ விக்டர் என்பவர் 18 வயது 314 நாட்களில் அறிமுகமானதே முன்னாள் சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமானதன் அவர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : தோனியின் மாஸ்டர் முடிவு.. என்னோட இடம் வீணாகல.. ஷிகர் தவானுக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய சேவாக்

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக விளையாடிய அவர் 6 போட்டிகளில் 21 விக்கெட்டுகளில் வீழ்த்தி அசத்தியதால் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவர் தென்னாபிரிக்க அணிக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement