
இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ள ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தாங்கள் விளையாடியுள்ள 11 லீக் ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தினை பிடித்து பலமான நிலையில் உள்ளது.
இன்னும் லீக் சுற்று போட்டிகளில் அந்த அணிக்கு மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் வேளையில் அதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களுக்குள் ஒன்றை பிடித்து பிளே ஆப் வாய்ப்பினை உறுதி செய்துவிடும். இதன் காரணமாக இந்த தொடரானது ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த மே 8-ஆம் தேதி தற்காலிகமாக ஐ.பி.எல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டதால் மே 9-ஆம் தேதி நடைபெறயிருந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அணியால் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் இந்த வார இறுதியில் மீண்டும் ஐபிஎல் தொடரானது துவங்கும் போது லக்னோ அணிக்கு எதிரான அந்த போட்டி நடைபெறும் என்று தெரிகிறது.
அப்படி நடைபெற இருக்கும் அடுத்த போட்டிக்கான பெங்களூரு அணியில் கேப்டன் ரஜத் பட்டிதார் இடம்பெற்று விளையாட வாய்ப்பில்லை என்றும் அதன் காரணமாக புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கடைசியாக மே 3-ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது விரலில் காயம் அடைந்த ரஜத் பட்டிதார் இன்னும் அந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை எனவே அவர் அடுத்த போட்டியை தவறவிடுகிறார். இதனால் ஆர்.சி.பி அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் ஷர்மா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலியை வாழ்த்தி – கவுதம் கம்பீர் போட்ட பதிவு
ஏனெனில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து ஆர்.சி.பி அணியின் வீரர்களுடன் நல்ல பிணைப்பில் இருக்கும் அவர் முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் கேப்டனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதன் காரணமாகவே அவரை புதிய கேப்டனாக அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.