- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த வெற்றி இந்திய ரசிகர்களின் கண்ணை மறைச்சுடுச்சு.. ரோஹித், கோலிக்கு ஜான்டி ரோட்ஸ் ஆதரவு

இந்திய அணி சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 3 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டது. அத்துடன் சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியே உள்ளது.

அந்த தோல்விக்கு விராட் கோலி கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமானது. அதனால் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவது எந்த வெளிநாட்டு அணிக்கும் சிம்ம சொப்பனமென்று ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

கண்ணை மறைத்த வெற்றி:

இருப்பினும் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது. அந்த வெற்றிகள் இந்திய ரசிகர்களின் கண்ணை மறைத்ததால் விராட், ரோகித் ஆகிய இருவரை மட்டும் விமர்சிப்பதாகவும் ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை தெரிவிக்கும் உரிமையை கொண்டுள்ளார்கள்”

கிரிக்கெட் என்பது அந்த மாதிரியான விளையாட்டு. அதில் இப்போதுள்ள வீரர்கள் பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. குறிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவதாக இருந்தாலும் சரி அல்லது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கொடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஊடகங்களில் விமர்சனங்கள் எழுவதாக இருந்தாலும் சரி அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது”

- Advertisement -

நியாயமற்ற விமர்சனம்:

“இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் வல்லுனர்கள் பேசுகிறார்கள். தங்களிடமிருந்து வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் ஆஸ்திரேலியா பயணம் செல்வதற்கு மிகவும் கடினமான இடம். அதை கடந்த 2 தொடர்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதால் இந்திய ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: எனக்கு ஆஸ்திரேலிய அணிதான் முக்கியம்.. அதற்காக நான் இதை செய்யவும் தயார் – நாதன் லயன் அதிரடி

“உண்மையில் ஆஸ்திரேலியாவில் வெல்வது மிகவும் கடினம். அங்கே வெல்வதற்கான அற்புதமான செயல்பாடுகள் கடந்த 2 தொடர்களில் வெளிபட்டது. ஆனால் இம்முறை அது போன்ற செயல்பாடுகள் வெளிப்படவில்லை. எனவே அதற்காக இரண்டு பேரை மட்டும் விமர்சிப்பது சரியானது அல்ல என்று நினைக்கிறேன்” என கூறினார். அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித், கோலி விளையாட உள்ளனர்.

- Advertisement -