ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரானது வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கும் வேளையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது.
ஆஸ்திரேலிய அணிக்காக இதையும் செய்ய தயார் :
கடந்த முறை நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி இம்முறையும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் இலங்கை தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் அவர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால் ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் பந்துவீச தான் தயார் என அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான நாதன் லயன் அதிரடி கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது : இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு அதிக அளவிலான ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இலங்கை மைதானங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள். எனவே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்த மைதானங்களில் நான் அதிக ஓவர்களை வீசும் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணி தான் எனக்கு முக்கியம். எனவே இந்த டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு வாரமும் நான் 100 ஓவர்கள் வீசவேண்டும் என்றாலும் எனக்கு அது பிரச்சனை கிடையாது. அணிக்காக நான் 100 ஓவர்களை வீசவும் தயாராக காத்திருக்கிறேன் என்று நாதன் லயன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இனிமே உங்க இஷ்டத்துக்கு இருக்க முடியாது.. இந்திய வீரர்களுக்கு புதிய கட்டளையை விதித்த – பி.சி.சி.ஐ
ஆஸ்திரேலியா அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை அந்த அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 539 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.