டெஸ்ட்டை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் அரிதான சாதனையை நிகழ்த்திய – இந்திய வீரர்

Jaydev-Unadkat
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரையும் கைப்பற்றி மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணி தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி இருந்த ஜெய்தேவ் உனட்கட்-க்கு ஒரு நாள் தொடரிலும் சிராஜின் ஓய்வு காரணமாக மூன்றாவது போட்டியில் பிளேயிங் லெவனின் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு தான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 7 போட்டிகளில் விளையாடியிருந்த வேளையில் தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து தனது எட்டாவது போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடியிருந்தார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த வீரராக ஒரு அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் விளையாடிய ஒருநாள் ஆட்டத்திற்கு பிறகு சரியாக 9 ஆண்டுகள் 252 நாட்கள் கழித்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த வீரராக ராபின் சிங்கின் சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னாங்கா பகல் கொடுமையா இருக்கு? ஆஷஸ் தொடரை வென்றும் பெரிய தண்டனை வழங்கிய ஐசிசிக்கு – உஸ்மான் கவாஜா பதிலடி

இந்த பட்டியலில் ராபின்சன் 7 ஆண்டுகள் 230 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அடுத்ததாக அமித் மிஸ்ரா (6 ஆண்டுகள், 160நாட்கள்), பார்த்திவ் பட்டேல் (6 ஆண்டுகள், 133 நாட்கள்), ராபின் உத்தப்பா (5 ஆண்டுகள், 344 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement