என்னாங்கா பகல் கொடுமையா இருக்கு? ஆஷஸ் தொடரை வென்றும் பெரிய தண்டனை வழங்கிய ஐசிசிக்கு – உஸ்மான் கவாஜா பதிலடி

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சுமார் 2 மாதங்களாக 5 பரபரப்பான போட்டிகளை விருந்து படைத்து 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்த நிலையில் 3வது போட்டியில் வென்ற இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் மழை வந்து இங்கிலாந்தின் வெற்றியை தடுத்த 4வது போட்டி டிராவில் முடிந்ததால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைத்து அசத்தியது.

இறுதியாக லண்டனில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்து 21 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டது. அப்படி டி20 கிரிக்கெட்டுக்கு நிகரான பரபரப்பையும் ஜானி பேர்ஸ்டோ ரன் அவுட் செய்யப்பட்ட சர்ச்சையும் ஸ்டுவர்ட் ப்ராட் விடைபெற்ற நெகிழ்ச்சியான தருணமும் அடங்கிய இந்த ஆஷஸ் உண்மையாகவே உலக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்றால் மிகையாகாது.

- Advertisement -

கவாஜா அதிருப்தி:
இந்நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மிகவும் மெதுவாக பந்து வீசியதால் இரு அணிகளுக்கும் தலா 5% சம்பளம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதை விட டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெற்ற புள்ளிகளிலிருந்து மெதுவாக வீசிய ஒவ்வொரு ஓவருக்கும் தண்டனையாக ஒவ்வொரு புள்ளி குறைக்கப்படுவதாகவும் ஐசிசி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் 10 ஓவர்களை மெதுவாக வீசியதற்காக ஆஸ்திரேலியா மொத்தமாக வென்ற புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகள் கழிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதே போல முதல் போட்டியில் 2, 2வது போட்டியில் 9, 4வது போட்டியில் 3, 5வது போட்டியில் 5 என மொத்தமாக இந்த தொடரில் 19 ஓவர்களை மெதுவாக வீசியதற்காக இங்கிலாந்து வென்ற மொத்த புள்ளிகளிலிருந்து 19 புள்ளிகள் கழிக்கப்படுவதாகவும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

- Advertisement -

அப்படி கழித்த புள்ளிகளை தவிர்த்து இந்த தொடரில் வெறித்தனமாக போராடி வென்ற புள்ளிகளிலிருந்து கடைசியாக ஆஸ்திரேலியா 18 புள்ளிகளையும் இங்கிலாந்து வரும் 9 புள்ளிகளை மட்டுமே வென்றுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. இது இரு அணிகளுக்குமே 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதில் வருங்கால தொடர்களிலும் கடைசி கட்ட நேரங்களிலும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமில்லை எனலாம்.

இந்நிலையில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டி மழையால் டிராவில் முடிந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் பந்து வீசுவதற்கே வாய்ப்பு பெறாத தாங்கள் எப்படி 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பும் ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா இந்த அறிவிப்பு பகல் கொடுமையை போல் இருப்பதாக ட்விட்டரில் ஐசிசிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் 2 நாட்கள் பெய்த மழை காரணமாக 2வது இன்னிங்ஸில் நாங்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்பையே பெறவில்லை. ஆனாலும் ஐசிசி எங்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து அபராதமும் 10 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளையும் மெதுவாக பந்து வீசியதற்காக கழித்துள்ளனர். இது நிறைய அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

இதைத்தொடர்ந்து தற்போதைய நிலைமையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான் 100% புள்ளிகளுடன் முதலிடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1 – 0 (2) என்ற கணக்கில் வென்ற இந்தியா 66.67% புள்ளிகளுடன் 2வது இடத்திலும் இருக்கிறது. 3வது இடத்தில் 30 புள்ளிகளுடன் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் 4வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (16.67%) 5வது இடத்தில் இங்கிலாந்தும் (15%) இருக்கின்றன.

Advertisement