IND vs WI : 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

IND-vs-WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது.

இந்த டி20 தொடரானது இன்று ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கான போட்டிகள் எங்கு நடைபெறுகிறது? எந்த சேனலில் இந்த போட்டிகளை பார்க்கலாம்? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும் என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 3-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது போட்டியானது ஆகஸ்ட் 6-ஆம் தேதி கயானாவில் நடைபெற இருக்கிறது. மூன்றாவது t20 போட்டியானது ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதே கயானா நகரில் நடைபெற இருக்கிறது.

அதன் பிறகு நான்காவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஃப்ளோரிடா நகரிலும், ஐந்தாவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 13-ஆம் ஃப்ளோரிடா நகரிலும் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அனைத்துமே இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆடம்பர வசதிகள் வேணாம். அடிப்படை வசதியானது செய்ஞ்சி தாங்க – வெஸ்ட் வாரியத்திற்கு வேண்டுகோள் வைத்த ஹார்டிக் பாண்டியா

அதோடு இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் அனைவரும் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இலவசமாக கண்டுகளிக்கலாம். அதுதவிர்த்து ஆன்லைன் மூலம் பார்க்க விரும்புவோர் ஃபேன் கோடு மற்றும ஜியோ சினிமா ஆகிய செயலிகள் மூலம் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement