ஆடம்பர வசதிகள் வேணாம். அடிப்படை வசதியானது செய்ஞ்சி தாங்க – வெஸ்ட் வாரியத்திற்கு வேண்டுகோள் வைத்த ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை குவித்தது. பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 35.3 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே அடித்து அனைத்தையும் விக்கெட்டையும் இழந்ததால் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா பேசுகையில் : வெஸ்ட் இண்டீஸ் நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் வீரர்களுக்காக செய்து கொடுத்த ஏற்பாடுகள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : அடுத்த முறை நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் வரும்போது இன்னும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தருவார்கள் என நம்புகிறேன்.

- Advertisement -

இங்கு பயணம், ஹோட்டல் என பல்வேறு வகைகளில் நாங்கள் சவாலை சந்தித்துள்ளோம். நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இதனை கருத்தில் கொண்டு அடுத்த முறை சரிப்படுத்தி தருவார்கள் என்று விரும்புகிறேன். நாங்கள் ஆடம்பர வசதியுடன் கூடிய ஏற்பாட்டை எல்லாம் கேட்கவில்லை. அடிப்படைத் தேவைகள் சரியாக இருந்தால் போதும் என்று விரும்புகிறோம்.

இதையும் படிங்க : நான் வாய்ப்புக்காக இல்ல நாட்டுக்காக ஆடுறவன், அந்த சான்ஸ் கிடைக்கலைனாலும் கவலைப்பட மாட்டேன் – தாக்கூர் நெகிழ்ச்சி பேட்டி

அந்த வகையில் எங்களுக்கான பயணம் மற்றும் தங்குமிடம் என அனைத்தையும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அடுத்த முறை இங்கு வரும்போது கருத்தில் கொள்வார்கள் என்று நம்புவதாக ஹார்டிக் பாண்டியா வருத்தத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement