12 ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கிடைத்தும் பங்களாதேஷ் பயணிக்காமல் இருக்கும் உனட்கட் – என்ன காரணம்?

Unadkat
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பபந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

IND-vs-BAN

- Advertisement -

அதனால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி போன்றோர் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் 11 ஆண்டுகள் கழித்து தனது வாய்ப்பினை பெற்ற வேகப்பபந்து வீச்சாளர் ஜெயதேவ் உனக்கட் முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் திடீரென அவருக்கு இந்திய அணியிலிருந்து அழைப்பு கிடைத்ததால் வங்கதேச நாட்டிற்கு செல்லும் விசா அவருக்கு கிடைக்கவில்லை. வழக்கமாக பிசிசிஐ தான் வீரர்களின் விசா மற்றும் பயணம் என அனைத்து விவரங்களையும் கவனித்துக் கொள்ளும். ஆனால் அவர் திடீரென அழைக்கப்பட்டதால் குறுகிய நேரத்திற்குள் அவருக்கான பங்களாதேஷ் விசாவை தயார் செய்ய முடியவில்லை என்பதால் இன்னும் அவர் ராஜ்கோட்டில் தான் இருந்து வருகிறார்.

unadkat

நாளை டிசம்பர் 14-ஆம் தேதி போட்டி நடைபெற உள்ள வேளையில் மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் உனட்கட் இன்னும் இந்தியாவிலேயே இருப்பதால் நிச்சயம் அவரால் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்க வாய்ப்பு தரலானாலும் அவர் தேர்வுக்குழுவின் கதவினை தட்டிக்கொண்டே இருப்பார் – தினேஷ் கார்த்திக் கருத்து

இருப்பினும் விசா பிரச்சனை சரி செய்யப்பட்டு எப்படியாவது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் உனட்கட்டை வங்கதேசத்திற்கு அனுப்புவோம் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி 12 ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கிடைத்தும் விசா பிரச்சனையால் அவர் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய நிலை வந்ததற்காக ரசிகர்களும் அவருக்காக தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement