நீங்க வாய்ப்பு தரலானாலும் அவர் தேர்வுக்குழுவின் கதவினை தட்டிக்கொண்டே இருப்பார் – தினேஷ் கார்த்திக் கருத்து

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றியை பெற காத்திருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி மிகச் சிறப்பான பதிலடி கொடுக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம்பெறாததால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியை வழிநடத்த இருக்கிறார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இந்த தொடரில் அவர் விளையாடுவது கேள்விக்குறி தான் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தோன்றுகிறது.

abhimanyu easwaran 1

இருப்பினும் முழுக்க முழுக்க உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. அந்த வகையில் அபிமன்யு ஈஸ்வரன் குறித்து பேசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்திய அணியில் விளையாட அனைத்து தகுதிகளும் உள்ளது.

- Advertisement -

ஆனால் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இருப்பதினால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் சத்தியம் செய்து கூறுகிறேன் தொடர்ச்சியாக தேர்வு குழுவின் கதவுகளை அவர் உடைத்துக் கொண்டே இருக்கும் வீரராக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : சுந்தரா ட்ராவல்ஸ் போல ஸ்டீவ் ஸ்மித்தின் முக்கிய பொருளை பதம் பார்த்த எலி – எங்கே, எப்போது, என்ன நடந்தது

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவர் நல்ல பார்மில் இருக்கிறார். அதோடு நான் அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன். நிறைய கிரிக்கெட்டும் விளையாடி இருக்கிறேன். அவரின் ஆட்டத்தை பார்த்த வகையில் சொல்கிறேன் அவர் இந்திய அணியில் பெரிய வீரராக திகழ்வார் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement