சுந்தரா ட்ராவல்ஸ் போல ஸ்டீவ் ஸ்மித்தின் முக்கிய பொருளை பதம் பார்த்த எலி – எங்கே, எப்போது, என்ன நடந்தது

steve smith
- Advertisement -

2023ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் வரலாற்றின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவதற்காக உலகின் அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் கடுமையான போட்டியிட்டு வருகின்றன. கடந்த 2019 முதல் நடைபெற்று வரும் அதற்கான லீக் சுற்றில் முதல் தொடரில் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்ட ஆஸ்திரேலியா இம்முறை வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் ஏமாற்ற தோல்வியை சந்தித்த அந்த அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த அத்தொடரின் முதல் போட்டியில் கேப்டன் பட் கமின்ஸ் காயமடைந்ததால் அடிலெய்டில் நடைபெற்ற 2வது போட்டியில் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக ஆஸ்திரேலியாவை வழி நடத்தினார். அவரது தலைமையில் இளஞ்சிவப்பு நிற பந்தில் வெஸ்ட் இண்டீஸை ஓட விட்டு ஆஸ்திரேலியா 459 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்தது.

- Advertisement -

சுந்தரா ட்ராவஸ் கதை:
முன்னதாக அந்தப் போட்டியில் கிழிந்து தேய்ந்து போன தொப்பியை ஸ்டீவ் ஸ்மித் அணிந்து விளையாடியது அனைவரது கவனத்தை ஈர்த்து விமர்சனத்தை உண்டாக்கியது. பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் ஏதேனும் ஜாம்பவான் கையால் வாங்கும் தொப்பியைத்தான் தங்களது எஞ்சிய கேரியர் முழுவதும் கிரிக்கெட் வீரர்கள் அணிந்து விளையாடி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் புதிய தொப்பிகள் கொடுக்கப்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விராட் கோலி உட்பட பெரும்பாலானவர்கள் தங்களது முதல் தொப்பியைத் தான் அணிந்து விளையாடுவார்கள்.

அதிலும் குறிப்பாக அடர் பச்சை வண்ணத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கொடுக்கப்படும் தொப்பிகள் மிகவும் புகழ்பெற்றதாகும். அதனாலேயே அவர்களைப் போன்ற நட்சத்திரங்கள் அணிந்து விளையாடும் தொப்பிகள் சற்று பழையதாக காட்சியளிக்கும். அந்த வகையில் 2010இல் அறிமுகமாகி 88 போட்டிகளில் விளையாடினாலும் அதற்காக இப்படி கிழிந்திருப்பதற்கு காரணம் என்ன என்று குழம்பிய ரசிகர்கள் தேசத்தின் அடையாளமான தொப்பியை இப்படியா பராமரிப்பது என்று விமர்சித்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் அத்தொடரை வென்ற பின் பரிசளிக்கப்பட்ட வெற்றிக் கோப்பையை அதே கிழிந்த தொப்பையை அணிந்து கொண்டு வாங்கி போஸ் கொடுத்த அவரிடம் ஏன் உங்களது தொப்பி இவ்வளவு சேதமடைந்துள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கால்லே மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தமது தொப்பியை எலிகள் கடித்து விட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கால்லே நகரில் விளையாடிய போது இதர மைதானங்களில் விளையாடுவதைப் போலவே உடைமாற்றும் அறையில் என்னுடைய தொப்பியை விட்டுச் சென்றேன். ஆனால் அடுத்த நாள் வந்து பார்க்கும் போது அது கடுமையாக சேதமாகியிருந்தது. அனேகமாக எலிகள் அதை கடித்து குதறியிருக்கும் என்று நினைக்கிறேன். எனவே இந்த வாரத்திற்குள் அந்த தொப்பியை நான் சரி செய்ய முயற்சிக்க உள்ளேன். ஏனெனில் அது அதிகமாக சேதமடைந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: என்னய்யா பிட்ச் இது? மீண்டும் கடுப்பாகி ஐசிசி வழங்கிய பெரிய தண்டனை – சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்

இதை பார்க்கும் ரசிகர்களுக்கு பிரபல சுந்தரா ட்ராவல்ஸ் தமிழ் திரைப்படத்தில் வடிவேலுவின் பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிய எலி செய்த வேலை தான் நினைவுக்கு வருகிறது என்றே கூறலாம். இருப்பினும் கூட அதை தைத்து மீண்டும் அதே தொப்பியை தான் அணிய இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அந்தளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் புதிய தொப்பியை பெற்றாலும் முதல் தொப்பியை தங்களுடைய உயிராக கிரிக்கெட் வீரர்கள் நினைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement