12 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த வீரர் – அதுக்குன்னு இவ்ளோ பெரிய கேப்பா?

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த வேளையில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டிசம்பர் 10-ஆம் தேதி சட்டகிராம் நகரில் நடைபெற்று வருகிறது.

IND vs BAn Mushfiqar Rahim Shreyas Iyer

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்ததுமே இந்திய அணி வரும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக யார் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சௌராஷ்டிரா அணிக்காக உள்ளூர் தொடர்களில் அசத்தலாகி விளையாடி வரும் ஜெய்தேவ் உனட்கட் இடம்பிடித்துள்ளார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Unadkat

அதன்படி கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து தனது 19-ஆவது வயதிலேயே அறிமுகப் போட்டியில் விளையாடிய உனட்கட் அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த உள்நாட்டு தொடர்களில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த அவரை தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் ரஞ்சித் தொடரை சௌராஷ்டிரா அணி முதல் முறையாக கைப்பற்ற உதவிய உனட்கட் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs BAN : 3வது போட்டியில் வங்கதேசத்தை புரட்டி எடுத்த இந்தியா – 11 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை ஸ்கோர் விளாசல்

முகமது ஷமி காயத்திலிருந்து வெளியேறிவிட்டதால் அவரது இடத்தை பிடித்துள்ள உனக்கட் ஒருவேளை பிளேயிங் லெவனில் விளையாடினால் 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement