IND vs AUS : நீங்க போயி ரஞ்சி போட்டியில ஆடிட்டு வாங்க – இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS Steve SMith

- Advertisement -

இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் முதல் போட்டியில் விளையாடாத வேளையில் அவர் இரண்டாவது போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த செய்தி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகி உள்ளது. அதன்படி ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் கர்நாடக அணியை வீழ்த்தி சௌராஷ்ட்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதால் பெங்கால் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் அந்த ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக கேப்டனாக ஜெயதேவ் உனட்கட் விளையாட இருக்கிறார்.

Jaydev Unadkat

இதன்காரணமாகவே அவர் இந்த இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் பல ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் தான் தனது இரண்டாவது போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த வேளையில் முதலாவது போட்டியில் விளையாடாத அவர் தற்போது இரண்டாவது போட்டியையும் தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பேசாம ஸ்லிப் பீல்டிங் செய்ய அவர கொண்டு வாங்க, விராட் கோலியை விளாசும் ரசிகர்கள் – மோசமான புள்ளிவிவரம் இதோ

இருப்பினும் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய பின்னர் மீண்டும் ஜெயதேவ் உனட்கட் அணியில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு அவருக்கான மாற்று வீரர் யார் என்றும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement