பேசாம ஸ்லிப் பீல்டிங் செய்ய அவர கொண்டு வாங்க, விராட் கோலியை விளாசும் ரசிகர்கள் – மோசமான புள்ளிவிவரம் இதோ

Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்ததாக வேண்டுமென்றே குற்றம் சுமத்திய ஆஸ்திரேலியாவை தனது அபார பந்து வீச்சால் 177, 91 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அதே மைதானத்தில் பேட்டிங்கில் 400 ரன்கள் குவித்தது. அதனால் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டிய இந்தியா ஆஸ்திரேலியர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது.

இந்த வெற்றியால் வரும் ஜூலை மாதம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 90% வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ள இந்தியா மேற்கொண்டு 2 வெற்றிகளை பெற்று 100% உறுதி செய்யும் முனைப்புடன் விளையாட உள்ளது. முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா பீல்டிங் துறையில் சுமாராகவே செயல்பட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அதிகமாக கேட்ச்கள் கிடைக்கக்கூடிய ஸ்லிப் பீல்டிங் பகுதியில் இந்தியா மோசமாக செயல்பட்டது.

- Advertisement -

சொதப்பும் விராட் கோலி:
பொதுவாகவே ஸ்லிப் பகுதியில் எட்ஜ் ஆகி வரும் பந்துகள் எதிர்பாராத வேகத்திலும் கோணத்திலும் வரும் என்பதால் அதை பிடிப்பதற்காகவே ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் குறிப்பிட்ட சில பயிற்சிகளை எடுத்த பீல்டர்களை மட்டுமே அந்த இடத்தில் நிறுத்துவார்கள். அந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் பீல்டராக கருதப்படும் விராட் கோலி அந்த இடத்தில் நிற்பதற்கு தகுதியானவர் என்றாலும் சமீபத்திய தொடர்களில் அவர் நிறைய கேட்ச்களை கோட்டை விட்டு வருகிறார்.

குறிப்பாக கடந்த மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் லிட்டன் தாஸ் கொடுத்த ஒன்றுக்கு 3 கேட்ச்களை அவர் தவறு விட்டது இறுதியில் எளிதாக கிடைக்க வேண்டிய வெற்றியை ஷ்ரேயஸ் ஐயர் – அஸ்வின் ஆகியோர் போராடி கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ஆனால் அதிலிருந்து இன்னும் முன்னேற்றத்தை காணாத அவர் இந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச்சை தவற விட்ட நிலையில் 2வது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் கொடுத்த எளிதான கேட்ச்சை நழுவ விட்டது அதை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை அதிருப்தியடைய வைத்தது.

- Advertisement -

மேலும் இது போன்ற பெரிய வீரர்கள் கொடுக்கும் கேட்ச்களை தவற விட்டால் பின்னர் வருத்தப்படும் அளவுக்கு அவர்கள் பெரிய ரன்களை குவித்து வெற்றி தட்டிப் பறித்து விடுவார்கள் என்பதால் பேசாமல் விராட் கோலியை கவர் திசையில் பீல்டிங் செய்ய வைக்குமாறு கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இங்கே கிரிக்கெட்டில் கேட்ச்களை தவற விடுவது சகஜம் தானே என்று சிலர் சொல்லலாம்.

ஆனால் 2022க்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை தவற விட்ட பீல்டர்களில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு (7) பின் விராட் கோலி 2வது இடத்தில் இருக்கிறார். இதில் ஸ்டீவ் ஸ்மித் 26 வாய்ப்புகளில் வெறும் 7 கேட்ச்களை தவற விட்டுள்ளார். அதாவது 3இல் 1 பங்குக்கும் குறைவாக மட்டுமே அவர் கேட்ச்களை தவற விட்டுள்ளார். ஆனால் வெறும் 14 வாய்ப்புகளில் 6 கேட்ச்களை தவற விட்டுள்ள விராட் கோலி கிட்டத்தட்ட 3இல் 2 கேட்ச்களை தவற விட்டு வருகிறார்..

இதையும் படிங்க:வீடியோ : எங்க வாழ்க்கைல இப்படி ஒரு கேட்ச் பாத்ததே இல்ல, லோக்கல் வீரரை வியந்து பாராட்டிய சச்சின் – வாகன்

அதனால் மேலும் அதிருப்தியடையும் ரசிகர்கள் பேசாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்களை பிடித்து தாறுமாறாக சுழலும் மைதானத்திலும் ஸ்லிப் பகுதியில் துல்லியமாக செயல்பட கூடிய ரகானேவை இத்தொடரில் தேர்வு செய்து சப்ஸ்டியூட் பீல்டராக பயன்படுத்தலாம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement