- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்திய அணியின் இந்த பந்து வீச்சாளர் பந்து வீசினால் எதிர்கொள்ள சிரமப்படுவேன் – ஜெயவர்த்தனே ஓபன் டாக்

ஜெயவர்த்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு ஜாம்பவான் வீரர் ஆவார். இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். 600 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள இவர் 25 ஆயிரம் ரன்களையும், 54 சதங்களும் மற்றும் 136 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் இப்பொழுதுதான் கிரிக்கெட் விளையாடி இருந்தால் எந்த பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால் கடினப்பட்டு இருப்பேன் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பயிற்சியாளராக இருந்து வருகிறேன்.

- Advertisement -

அப்பொழுது வலைப்பயிற்சியில் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளேன். மேலும் அவர் இந்திய அணிக்காக அறிமுகமான போதும் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என தெரியும். அதனை போன்ற அவர் இந்திய அணிக்கு அறிமுகமாகி தற்போது வரை இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

நான் இந்த சூழலில் அவரது பந்து வீச்சை எதிர் கொண்டால் நிச்சயமாக மிகவும் கடினப்பட்டு இருப்பேன். என்னால் அவரது வேகத்தையும், துல்லியத்தையும் கணிக்க தடுமாறுவேன் என்பதே உண்மை. மேலும் இந்த காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஏனென்றால் கேன் வில்லியம்சன் என்றே கூறுவேன். அவர் போட்டிகளுக்கு தகுந்தார் போல் சிறப்பாக விளையாடி வருகிறார். பெரிய பெரிய போட்டிகளில் அவருடைய ஆட்டம் சிறப்பாக உள்ளது என்று ஜெயவர்த்தனே கூறினார்.

- Advertisement -
Published by