மீண்டும் அவர் டீம்க்கு வந்துட்டாரு இல்ல. வேர்ல்டுகப் இந்திய அணிக்கு தான் – மகிளா ஜெயவர்த்தனே நம்பிக்கை

- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என 16 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

IND

- Advertisement -

மேலும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டி20 உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்ததால் அனைத்து நாடுகளுமே தங்களது உலகக் கோப்பை அணியை அறிவித்துவிட்டன. அந்த வகையில் இந்திய அணியும் கடந்து சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

அதில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம் பிடித்துள்ளார்கள். அதேபோன்று காயம் காரணமாக ஆசிய கோப்பையை தவறவிட்ட ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

Jasprit Bumrah

இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணி குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் அளவிற்கு தற்போது சிறப்பாகவே உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : காயம் காரணமாக ஆசிய கோப்பையை தவறவிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பலம். ஆசிய கோப்பை தொடரின் போது அவர் இல்லாத குறையை இந்திய அணி உணர்ந்தது. அவர் இல்லாததால் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டே சற்று வித்தியாசமாக தெரிந்தது.

இதையும் படிங்க : ஹண்ட்ரட், சிக்ஸ்ட்டி எல்லாம் ஓரம் நில்லுங்க – ரசிகர்களை கவர ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் புதிய ரூல்ஸ் கொண்டுவரும் பிசிசிஐ

ஆனால் இம்முறை டி20 உலக கோப்பையில் அந்த குறை நீங்கும். ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மேலும் பலத்தை தந்துள்ளது. எனவே தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு தரமான அணியாக இருப்பதாகவே தான் நினைப்பதாக ஜெயவர்த்தனே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement