தற்போதைய டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்த்தனே – ஒரு இந்தியருக்கு இடம்

Jayawardena
- Advertisement -

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய மும்பை அணியின் முதன்மை பயிற்சியாளருமான மகேளா ஜெயவர்தனே சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர் என்பது மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். அவர் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களையும் தனது கவனத்தில் எடுத்து உற்று நோக்கி வருகிறார்.

Jayawardene

- Advertisement -

அந்த வகையில் தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் தனது டி20 கனவு அணிக்காக முதல் 5 வீரர்களை அவர் அறிவித்துள்ளார். அந்த வகையில் இந்த பட்டியலில் முதல் வீரராக ஜோஸ் பட்லரை அவர் தேர்வு செய்துள்ளார். துவக்க வீரரான பட்லர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு செல்லக் கூடியவர். தற்போது ஐபிஎல் தொடரிலும் அவர் தனது சிறப்பான பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவரை முதல் வீரராக தேர்வு செய்துள்ளார்.

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளராக ரஷீத் கானை தேர்வு செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சில் எந்தவித சந்தேகமும் இன்றி முதன்மையான வீரராக ரஷீத் கானை தேர்வு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு இந்தப் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா அவர் வேகப்பந்து வீச்சாளராக அணியில் இணைந்துள்ளார்.

Jasprit Bumrah Shaheen Afridi

இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் பும்ரா தற்போது துணை கேப்டனாகவு இருந்து வருகிறார். பந்துவீச்சில் கச்சிதமாக செயல்பட்டு வரும் அவர் விக்கெட்டுகளையும் வீழ்த்த கூடிய திறமை கொண்டதனால் இவரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று அடுத்த இரண்டு வீரர்களாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஸ்வான் ஆகியோரை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார். ஷாஹீன் அப்ரிடி துவக்க ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். அதே போன்று டெத் ஓவர்களிலும் நன்றாக வீசுவதால் அவரை தேர்வு செய்துள்ள ஜெயவர்த்தனே ரிஸ்வான் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் திகழ்ந்து வருவதால் அவரையும் தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க : 2 ஹாட்ரிக் எடுத்தும் விராட் சான்ஸ் கொடுக்கல, அவர்தான் காப்பாத்திருக்காரு – குல்தீப் கழற்றிவிடப்பட்ட பின்னணி

எந்த அணிக்கு எதிராகவும் சிக்கலின்றி ரன்களை குவிப்பதால் ரிஸ்வான் எனது அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கனவு அணியில் விராட் கோலி, கே.எல் ராகுல், ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் போன்ற எந்த முன்னணி வீரர்களுக்கும் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement