இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து – அதிரடியாக நீக்கப்படும் வீரர்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி மொஹாலி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதாலும், விராத் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி என்பதனாலும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது.

INDvsSL cup

- Advertisement -

அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு போட்டியின் மூன்றாம் நாளான இன்று அருமையான வெற்றியை ருசித்து உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 574 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 174 மற்றும் 178 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் 9 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த அருமையான வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி பெங்களூரு நகரில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஜெயந்த் யாதவ் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர் உடன் இந்திய அணி களமிறங்கியது. அப்படி இந்திய அணியின் பந்துவீச்சில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் சிறப்பான செயல்பாட்டை அளித்தனர்.

இதையும் படிங்க : இந்த மேட்ச்ல இவரை ஏன் சேத்தாங்க? சுத்தமான வேஸ்ட் – ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான இந்தியவீரர்

அதேபோன்று ஜடேஜாவும், அஷ்வினும் சிறப்பாகவே பவுலிங் செய்தனர். ஆனால் 3 ஆவது சுழற்பந்து வீச்சாளராக அணியில் இருந்த ஜெயந்த் யாதவ் மட்டும் படுமோசமாக சொதப்பினார். இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சேர்த்து அவர் முழுவதுமாக 20 ஓவர்கள் கூட வீசவில்லை அதோடு அவரால் விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை என்பதினால் நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement