இந்த மேட்ச்ல இவரை ஏன் சேத்தாங்க? சுத்தமான வேஸ்ட் – ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான இந்தியவீரர்

Jayant
- Advertisement -

மொகாலி மைதானத்தில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி இன்று போட்டியின் மூன்றாம் நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 574 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சுழலில் சிக்கி சின்னாபின்னமானது என்றே கூறலாம்.

ind

- Advertisement -

ஏனெனில் முதல் இன்னிங்சில் வெறும் 174 ரன்களை மட்டுமே குவித்த இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியானது பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவர் மட்டும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை சாய்த்தனர். சுழற்பந்து வீச்சாளரான இவர்கள் இருவரும் பேட்டிங்கில் அசத்தியது மட்டுமின்றி பந்து வீச்சிலும் கலக்கினர்.

இப்படி இந்திய அணியில் இடம்பெற்ற இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இருந்த ஜெயந்த் யாதவ் தான் ஏன் இந்திய அணியில் இருக்கிறார் என்று தெரியாதவர் போன்று மிக மந்தமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். ஏனெனில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தபோது 18 பந்துகளை சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்.

Jayant 1

அதே போன்று சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளையாவது அவர் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் இன்னிங்சில் வெறும் 6 ஓவர்கள் மட்டும் வீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் வெறும் 11 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 21 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய ரசிகர்கள் அவரை இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனரர். இந்த மேட்ச்ல இவரை ஏன் சேர்த்தாங்க? இப்படி ஆடுறதுக்கு இவர் இந்த மேட்ச் விளையாடியே இருக்க வேணாம். இவரு சுத்த வேஸ்ட் இவருக்கு பதிலாக வேறு யாராவது விளையாடி இருக்கலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கபில்தேவின் சாதனையை கடந்து 2 ஆம் இடத்தை பிடித்து வரலாறு படைத்த அஷ்வின் – இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12-ம் தேதி பெங்களூர் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement