கபில்தேவின் சாதனையை கடந்து 2 ஆம் இடத்தை பிடித்து வரலாறு படைத்த அஷ்வின் – இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று முன்தினம் மார்ச் 4-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங் காரணமாக முதல் இன்னிங்சில் 574 ரன்கள் என்ற மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு சென்றது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 174 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்கவே இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியானது பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ashwin 2

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவதற்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 430 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் காரணமாக மேலும் 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் பட்சத்தில் கபில் தேவின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் தனது அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த தற்போது 436 விக்கெட்டுகள் எடுத்து கபில் தேவின் இரண்டாவது இடத்தை தாண்டி தற்போது அணில் கும்ப்ளேவுக்கு பின்னர் அதிக விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ashwin 1

இந்த பட்டியலில் இந்திய அணி சார்பாக கும்ப்ளே 619 விக்கெட்டுகள் உடன் முதலிடத்திலும், அஸ்வின் 436 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகள் உடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து ஹர்பஜன் 417 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும், 5வது இடத்தில் ஜாகிர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 311 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த இடத்தினை பகிர்ந்து உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இப்போட்டியில் கபில் தேவினை முந்தி வரலாற்று சாதனையை நிகழ்த்திய அஸ்வினின் இந்த சாதனையில் மேலும் ஒரு ஸ்பெஷல் உள்ளது. அந்த விடயம் யாதெனில் கபில்தேவ் 434 விக்கெட்டுகளை வீழ்த்த 227 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால் அஸ்வின் அதனை 160 ஆவது இன்னிங்ஸ்லேயே முறியடித்து காட்டியுள்ளார். அதாவது கபில்தேவினை விட 67 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நிச்சயம் இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாடும் பட்சத்தில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையையும் அவர் முறியடிக்க பிரமாதமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய வீரர் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளரின் பெயர் வெளியானது – குற்றசாட்டை மறுக்கும் அவர் யார் தெரியுமா?

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்னே இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது தமிழாக வீரர் அஷ்வின் 436 விக்கெட்டுகளுடன் 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement