இந்திய வீரர் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளரின் பெயர் வெளியானது – குற்றசாட்டை மறுக்கும் அவர் யார் தெரியுமா?

Saha
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தற்போது இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே, புஜாரா, ரிதிமான் சஹா, இசாந்த் சர்மா ஆகிய மூத்த வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். சமீப காலங்களாக அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து சொதப்பி வந்த இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய தேர்வு குழு முடிவு செய்துள்ளது.

saha

- Advertisement -

அந்த வேளையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேட்டி எடுப்பதற்காக ஒரு மூத்த பத்திரிகையாளர் தம்மை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் அவர் தன்னை மிரட்டியதாகவும் இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதாரமாக அந்தப் பத்திரிகையாளருடன் நிகழ்ந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மர்ம நபர் யார்:
ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் இந்திய நாட்டுக்காக விளையாடி ஒரு கிரிக்கெட் வீரரை மிரட்டிய இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டது. இதைப்பார்த்த இர்பான் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அவர் யார் அவரின் பெயர் என்பது பற்றிய விபரங்களை வெளியிடுமாறு விரேந்திர சேவாக் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் சகாவுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

Saha

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர் அந்த பத்திரிகையாளரின் பெயரை வெளியிட விரும்பவில்லை என கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை கதிகலங்க வைத்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சர்ச்சை பிசிசிஐ காதுக்கு சென்றது. இதுபற்றி உடனடியாக களமிறங்கிய பிசிசிஐ நிர்வாகம் சகாவை மிரட்டிய அந்த பத்திரிக்கையாளர் யார் என்பதை கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்தது.

- Advertisement -

விசாரணை குழு:
அந்த குழு சகாவிடம் தீவிர விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அந்த பத்திரிக்கையாளர் யார் என்பது பற்றி 3 பேர் கொண்ட குழு நேற்று சஹாவிடம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அவர் தம்மை மிரட்டிய அந்த நபர் யார் என்பது பற்றி பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக விசாரணைக்கு பின் கூறினார்.

saha

இது பற்றிய விசாரணைக்கு பின் ரித்திமான் சஃகா பேசியது பின்வருமாறு. “எனக்கு தெரிந்த அனைத்தையும் விசாரணை கமிட்டியிடம் நான் கூறிவிட்டேன். அவர்களிடம் அனைத்து விவரங்களையும் பகிர்ந்துள்ளேன். ஆனால் அந்த விவரங்களை இப்போது நான் உங்களிடம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அந்த விவரங்களை வெளியில் கூற வேண்டாம் என பிசிசிஐ நிர்வாகிகள் என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்” என கூறினார். இதனால் நேற்று மாலை வரை அந்தப் பத்திரிகையாளர் யார் என்பது பற்றி தெரியாமலேயே இருந்தது.

- Advertisement -

குற்றமுள்ள நெஞ்சு:
பொதுவாகவே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று அழகான பழமொழியை முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட நிலைமையில் அந்த பத்திரிகையாளரின் பெயரை பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டேன் என சஹா கூறியதுமே அந்த பத்திரிகையாளரின் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தது. உடனடியாக அந்தப் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் 9 நிமிட வீடியோவை பதிவிட்டு அதில் சஹா விஷயத்தில் உண்மையாக என்ன நடந்தது என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

Boria Majumdar Wriddhiman Saha

அவர் வேறு யாருமல்ல இந்தியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் “போரியா மஜூம்தார்” ஆவார். ஆனால் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன் மீது இப்படி குற்றச்சாட்டுகளை சஹா வைத்துள்ளதாக அந்த வீடியோவில் கூறியுள்ள அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் சஹாவுடன் பேசிய உரையாடலை அவர் தவறாக சித்தரித்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதை பார்க்கும் பல இந்திய ரசிகர்கள் உங்கள் மீது குற்றம் இல்லை எனில் எதற்காக நீங்கள் இப்படிக் கூற வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் உண்மையாகவே உங்கள் மீது குற்றம் இல்லை எனில் இந்திய வீரர் சகா குற்றம் எழுப்பிய முதல் நாளிலேயே இந்த பதிலை தெரிவித்திருக்க வேண்டாமா என அவர்கள் கேட்கிறார்கள். அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது பிசிசிஐ நிர்வாகிகளிடம் சஹா உண்மையைக் கூறிய பின் இப்படி குற்றத்தை மறுக்க என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதையும் படிங்க : ஷேன் வார்னின் நண்பராக நீங்கள் இருந்தால் கிடைக்கும் மரியாதை என்ன தெரியுமா? – கும்ப்ளே பகிர்ந்த தகவல்

கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயதாகும் இவர் கடந்த பல வருடங்களாக இந்தியாவில் உள்ள பல முன்னணி பத்திரிக்கையில் வேலை செய்து வருகிறார். அதே சமயம் தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி போன்ற அதிகாரம் நிறைந்தவர்களுடன் இவர் நெருங்கி பழகி வருகிறார். இப்படிப்பட்ட இவர் மீது விசாரணை நடத்தியுள்ள பிசிசிஐ சஹா விசயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement