ஷேன் வார்னின் நண்பராக நீங்கள் இருந்தால் கிடைக்கும் மரியாதை என்ன தெரியுமா? – கும்ப்ளே பகிர்ந்த தகவல்

Kumble
- Advertisement -

ஆஸ்திரேலியாவை தெரிந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஜாம்பவான் ஷேன் வார்னே தனது 52வது வயதில் திடீரென நேற்று முன்தினம் காலமானார். கடந்த 1992ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் அதன்பின் சுழல் பந்துவீச்சில் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை மிரட்டும் ஒரு அபாரமான சாம்பியன் பந்துவீச்சாளராக உருவெடுத்தார். குறிப்பாக 90களில் தடுமாறிக் கொண்டிருந்த லெக் ஸ்பின் பந்து வீச்சிற்கு உயிர் கொடுத்து காப்பாற்றிய அவர் லெக் ஸ்பின் பந்துவீச்சு வகையில் பல புதிய பரிணாமங்களை கொண்டுவந்தார்.

Warne-1

- Advertisement -

அவரின் பந்துகளை எதிர்கொள்வதற்கு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா உள்ளிட்ட எந்த ஒரு உலகின் தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் கண்டிப்பாக ஒன்றுக்கு பலமுறை யோசிப்பார்கள். கடந்த 1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் களமிறங்கிய ஆஷஸ் போட்டியின் முதல் பந்திலேயே அந்த அணி வீரர் மைக் கெட்டிங்கை தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் வார்னே க்ளீன் போலடாக்கினார்.

கிங் ஆப் ஸ்பின்:
நாளடைவில் அந்த பந்து 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்து என கிரிக்கெட் வல்லுனர்களாலும் ஜாம்பவான்களாலும் தேர்வு செய்யப்பட்டது. அந்த அளவுக்கு அவரின் பந்துகள் தரையில் பிட்ச் ஆனபின் தாறுமாறாக திரும்பி பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டாக மாறிவிடும். அந்த அளவுக்கு தரமான சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் அவர் லெக் ஸ்பின் பந்து வீச்சின் கலைஞன் என வல்லுனர்களால் போற்றப்படுகிறார்.

மொத்தம் 708 டெஸ்ட் விக்கெட்டுகள் உட்பட 1001 விக்கெட்டுகளுடன் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற மகத்தான சாதனையையும் அவர் படைத்துள்ளார். அப்படிபட்ட அருமையான ஷேன் வார்னேவின் இறப்பிற்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட உலகின் பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

மனம் திறக்கும் அனில் கும்ப்ளே :
அந்த வகையில் ஷேன் வார்னே பற்றி இந்தியாவின் மகத்தான லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் மனம் திறந்து பேசி அது பின்வருமாறு. “அவர் ஒரு மகத்தான வீரர். ஏனெனில் அவர் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடுவார். பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொள்வார்கள் என்பதால் எபோதுமே எங்களுக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பார். கடந்த 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த டெஸ்ட் தொடரை சச்சின் Vs வார்னே தொடர் என பலரும் அழைப்பார்கள். அந்தத் தொடரில் சச்சினுக்கு எதிராக முதல் இன்னிங்சில் வார்னே அபாரமாக செயல்பட்டடார். இருப்பினும் அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் 2வது இன்னிங்சில் வார்னேவை சச்சின் அபாரமாக எதிர்கொண்டார்” என கூறினார்.

kumble 1

கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் களத்தில் நண்பர்களாக இருந்தாலும் மைதானத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள் என அனில் கும்ப்ளே நினைவு கூர்ந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக ஆரம்பம் முதல் இறுதிவரை மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் நினைத்த ஷேன் வார்னே அந்த முயற்சியில் வெற்றி கண்டதாகவும் அவர் பாராட்டினார்.

- Advertisement -

நண்பர்கள் இல்லையெனில் ஸ்லெட்ஜிங் செய்வார்கள்:
“ஆஸ்திரேலிய அணியைப் பற்றி உங்களிடம் தற்போது நான் ஒரு கூறப்படாத ரகசியத்தை முதல் முறையாக சொல்கிறேன். அதாவது வார்னேவிடம் நண்பர்களாக யார் உள்ளார்களோ அவர்களிடம் இதர ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பு செய்ய மாட்டார்கள். எனவே நீங்கள் அவருடன் நண்பராக இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கி விளையாடினால் ஆஸ்திரேலிய வீரர்கள் உங்களை தொந்தரவு செய்ய செய்ய மாட்டார்கள்.

warne 1

அந்த வகையில் நான் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்ய சென்றபோது அவருடன் நட்பில் இருந்த காரணத்தால் என்னிடம் யாரும் வம்பு செய்யவில்லை. அது தான் வார்னே, அந்த வகையில் தான் அவர் எதிர் அணியில் இருந்தாலும் தனது நண்பர்களை சிறப்பாக நடத்துவார்” என இது பற்றி அனில் கும்ப்ளே முக்கியமான தகவலை பகிர்ந்தார்.

- Advertisement -

பொதுவாகவே கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்வதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை பலரும் அறிவார்கள். அந்த நிலையில் எதிரணியில் உள்ள வீரர்கள் ஷேன் வார்னேவுக்கு நண்பர் என தெரிந்து விட்டால் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் அவரை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 300 டெஸ்ட் போட்டியில் ஆடிட்டோம். ஆனா இங்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ண முடியல – இலங்கை கேப்டன் வருத்தம்

ஷேன் வார்னேவுக்கு பின் டெஸ்ட் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ள இந்தியாவின் கும்ப்ளே எப்போதுமே வார்னேவின் ஒரு நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement