300 டெஸ்ட் போட்டியில் ஆடிட்டோம். ஆனா இங்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ண முடியல – இலங்கை கேப்டன் வருத்தம்

Karunaratne
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த மார்ச் 4-ஆம் தேதி மொகாலி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியின் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் என்ற இமாலய ரன் குவிப்பினை வழங்கியது.

INDvsSL cup

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜடேஜா 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய விகாரி, பண்ட், அஸ்வின் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது 2-வது இன்னிங்சை பாலோ ஆன் முறைப்படி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளரான ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்நிலையில் தற்போது மூன்றாம் நாளான இன்று தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வரும் இலங்கை அணியானது தற்போது வரை 141 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் மோசமான நிலையில் போராடி வருகிறது.

jadeja

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருந்தாலும் இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் கிட்டத்தட்ட இலங்கை அணி தோல்வியை சந்திக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே இந்த முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக கொடுத்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த டெஸ்ட் போட்டி குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திய திமுத் கருணரத்னே கூறுகையில் :

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் முதலாவதாக பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இந்தியாவில் எப்போதும் முதலாவது பேட்டிங் செய்வது மிகவும் ஏதுவாக இருக்கும். இலங்கை அணி இதுவரை இந்த போட்டியோடு சேர்த்து 300 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி விட்டோம். ஆனால் இந்திய மண்ணில் இதுவரை நாங்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இந்த வருத்தம் எங்களுக்கு எப்போதுமே உள்ளது.

இதையும் படிங்க : தோனி கூறியது போல் இந்த மாதிரியான கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டில் செட் ஆகாது – தினேஷ் கார்த்திக்

எங்களது அணி நல்ல சிறப்பான அணியாக இருந்தாலும் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. தற்போதைய அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என்று கலவை இருப்பதனால் நிச்சயம் இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற விரும்புகிறோம் என்று கருணரத்னே கவலையுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement