தோனி கூறியது போல் இந்த மாதிரியான கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டில் செட் ஆகாது – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மொஹாலியில் துவங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து. அதன்படி முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

INDvsSL cup

- Advertisement -

அதேபோல் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்த நட்சத்திரம் விராட் கோலி 45 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

புதிய பயணம்:
முன்னதாக இந்த தொடருக்கு புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது புதிய பயணத்தை துவக்கி உள்ளது. ஏனெனில் கடந்த 2014 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி 7வது இடத்தில் இருந்த இந்தியாவை 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வரச்செய்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

Kohli-1

மேலும் 40 வெற்றிகளுடன் டெஸ்ட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைத்த போதிலும் கடந்த மாதம் அவர் திடீரென அந்த பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன்பாக கடந்த நவம்பர் மாதம் பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவரை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அந்த வேளையில் ஏற்கனவே டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மாவிடம் ஒருநாள் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதாவது ஒருநாள், டி20 எனப்படும் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிக்கு ரோகித் சர்மா மற்றும் டெஸ்ட் எனப்படும் சிகப்பு பந்து கிரிக்கெட் போட்டிக்கு விராட் கோலி என ஒரே சமயத்தில் இந்தியாவிற்கு 2 கேப்டன்கள் இருந்தார்கள். ஆனால் 2017 – 2021 வரை இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அடுத்த மாதமே திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதால் தற்போது மீண்டும் இந்தியாவின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

dinesh1

செட் ஆகாது:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் வெவ்வேறு கேப்டன்கள் என்ற நிலைமை எப்போதுமே சரியாக அமையாது என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இந்தியா போன்ற கிரிக்கெட் அதிகம் விளையாடப்படும் நாட்டில் ஒரு கேப்டன் மட்டுமே தேவை. ஒருவர் மட்டும் இருந்தால் 3 விதமான கிரிக்கெட்டையும் கட்டுப்படுத்துவது எளிதான ஒன்றாகும்.

- Advertisement -

ஒரு முறை இந்தியாவில் ஸ்பிலிட்-கேப்டன்ஷிப் வேலை செய்யாது என எம்எஸ் தோனி கூறியது இன்னும் எனக்கு நினைவுக்கு உள்ளது. கடந்த பல வருடங்களாக அது போன்ற ஒரு நிலைமை இந்திய கிரிக்கெட்டில் இருந்தது கிடையாது. எனவே இந்த நேரத்தில் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா சரியானவர். சமீபகாலமாக அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியுள்ளது. அவர் தலைமையில் சமீபத்தில் விளையாடிய அனைத்து தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றது” என கூறினார்.

Rohith-1

கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதை பார்த்துள்ளோம், பார்த்து வருகிறோம். இருப்பினும் இந்தியாவில் அது இன்று மட்டுமல்ல எப்போதுமே செட்டாகாது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் பட்டைய கிளம்புவார்:
தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா இதுவரை பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் இந்தியாவிற்கு அதிரடியான ஒயிட்வாஷ் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதுபற்றி தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “அவர் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் பல்வேறு வகையான நுணுக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். கேப்டனாக அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் அபாரமாக இருந்தது. அதேபோல் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்து தன்னம்பிக்கையும் கொடுக்கிறார். மேலும் இளம் வீரர்களுக்காக தனது இடத்தை தியாகம் செய்யவும் அவர் தயாராக இருக்கிறார்” என பாராட்டினார்.

இதையும் படிங்க : கோலி 100 ஆவது டெஸ்ட் : குடும்பத்தை இங்கிலாந்தில் விட்டுவிட்டு இரவோடு இரவாக இந்தியா வந்த கங்குலி

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை டி20 தொடர்களில் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தனது ஓப்பனிங் இடத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடினார். இப்படி இந்தியாவின் நலனுக்காக அபாரமாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா விரைவில் ஒரு உலக கோப்பையை வென்று கொடுப்பார் என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement