கோலி 100 ஆவது டெஸ்ட் : குடும்பத்தை இங்கிலாந்தில் விட்டுவிட்டு இரவோடு இரவாக இந்தியா வந்த கங்குலி

Ganguly
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மொகாலியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்தியா இலங்கை பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து முதல் இன்னிங்சில் 574/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

Ravindra Jadeja

- Advertisement -

அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடி சதமடித்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் முதல் நாளில் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 96 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை தனது பந்து வீச்சை போலவே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

கெளரவிக்கப்பட்ட விராட் கோலி :
குறிப்பாக அந்த அணியின் கேப்டன் கருணாரத்னே 28 ரன்கள் மற்றும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்கள் என நல்ல தொடக்கம் பெற்றபோதிலும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் அவுட்டாகி அந்த அணிக்கு ஏமாற்றம் அளித்தார்கள். இதன் காரணமாக 2-வது நாள் முடிவில் 108/4 எடுத்துள்ள இலங்கை இந்தியாவை விட இன்னும் 466 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Kohli-1

முன்னதாக இப்போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 45 ரன்கள் எடுத்தார். கடந்த 2011 முதல் இந்திய டெஸ்ட் அணியில் காலடி வைத்து வெற்றிகரமான பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவர் 2014 – 2021 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிற்கு அபாரமாக கேப்டன்ஷிப் செய்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். அப்படிப்பட்ட மகத்தான அவரை இந்த மைல்கள் போட்டியில் பிசிசிஐ சார்பில் சிறப்பு தொப்பி பரிசளித்து கௌரவப் படுத்தப்பட்டது.

- Advertisement -

சொன்னபடி செய்த சௌரவ் கங்குலி:
முன்னதாக 100 டெஸ்ட் போட்டிகளை விராட் கோலி நெருங்கிய போது 100வது போட்டியை எப்போது உலகின் எந்த இடத்தில் விளையாடினாலும் அப்போது மைதானத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்துவேன் என இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வேளையில் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றிருந்த சௌரவ் கங்குலி அங்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.

Sourav Ganguly On Virat Kohli 100th Test

ஆனால் அந்த சமயத்தில் விராட் கோலி தனது 100வது போட்டியில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் விளையாடுவதால் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தினரை விட்டுவிட்டு சௌரவ் கங்குலி தனியாக இந்தியா வந்தார். குறிப்பாக இந்த போட்டி துவங்கிய முதல் நாள் இரவில் லண்டனிலிருந்து விமானத்தின் வாயிலாக இரவோடு இரவாக இந்தியா வந்த அவர் பஞ்சாப் மாநிலத்தை அடைந்து அதன் பின் மொஹாலிக்கு வந்து விராட் கோலி களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் காலையிலேயே முதல் ஆளாக மைதானத்திற்கு வந்தார்.

- Advertisement -

Ganguly-1

அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் விராட் கோலிக்கு ராகுல் டிராவிட் சிறப்பு தொப்பியை பரிசளித்து கௌரவப்படுத்திய போது கேளரியில் அமர்ந்திருந்த சௌரவ் கங்குலி எழுந்து நின்று மனதார கைதட்டி பாராட்டினார்.

மோதல் இல்லை:
அந்த காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே வைரலானது. ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதற்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தான் காரணம் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவந்தார்கள்.குறிப்பாக டி20 கேப்டன் பதவியில் இருந்து அவரை விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு தம்மிடம் யாரும் எதுவும் கூறவில்லை என விராட் கோலி பதிலளித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் அவசர அவசரமாக டிக்ளேர் செய்ய நான் கொடுத்த மெசேஜ் தான் காரணம் – உண்மையை உடைத்த ஜடேஜா

அதன்பின் அது பற்றி கூறுவதற்கு கருத்து எதுவும் இல்லை நேரம் வரும்போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும் என சௌரவ் கங்குலி பதிலளித்திருந்தார். இதனால் இந்த இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது என பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் தற்போது விராட் கோலியை அவரது 100வது போட்டியில் நேரில் வந்து சௌரவ் கங்குலி வாழ்த்தியுள்ளார் என்றால் நிச்சயமாக இந்த இருவருக்கும் இடையே எந்தவித மோதலும் சண்டையும் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது.

இந்த போட்டியில் அவர் விளையாடுவது பற்றி சௌரவ் கங்குலி பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் இந்த பயணம் மகத்தானது. கடந்த 10 – 11 வருடத்திற்கு முன் தனது பயணத்தை தொடங்கிய அவர் இன்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார் என்பதுமிகப்பெரிய சாதனையாகும். இதற்கு முன் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்து 100 போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் பிசிசிஐ தலைவர் என்ற வகையில் அவருக்கு எனது மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். இதிலிருந்து இந்த இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் முரண்பாடும் இல்லை என்பது தெரிய வருகிறது.

Advertisement