வற்புறுத்தல ஆனா அதை செய்யலன்னா.. சான்ஸ் கிடைக்காது.. இஷான், பாண்டியா போன்றவர்களை எச்சரித்த ஜெய் ஷா

Jay Shah 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் இசான் கிசானை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் பணிச்சுமையால் விலகிய அவர் இதுவரை எவ்விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.

அதனால் இந்திய அணிக்காக மீண்டும் தேர்வு செய்ய ரஞ்சிக்கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாகவே அவருக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் அதைக் கேட்காத இசான் கிசான் பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்கிய ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய ஜார்க்கண்ட் மாநில அணிக்கு விளையாடவில்லை.

- Advertisement -

எச்சரித்த ஜெய் ஷா:
அத்துடன் பரோடாவுக்கு சென்றுள்ள அவர் பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படி சமீப காலங்களாகவே சில வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடினால் போதும் என்ற மனநிலையுடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதை புறக்கணித்து வருகின்றனர்.

மேலும் ஹர்திக் பாண்டியா போன்ற சில வீரர்களும் காயத்திற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டை மொத்தமாக புறக்கணித்து ரஞ்சிக்கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கட்டில் மட்டுமே விளையாடி வருவது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு விளையாட வேண்டுமெனில் பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள வீரர்கள் அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று செயலாளர் ஜெய் ஷா நிபந்தனை விதித்துள்ளார். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு உடல் ஒத்துழைக்காத ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களை வற்புறுத்தவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்களுக்கு ஏற்கனவே மொபைல் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானும் தற்போது கடிதம் எழுத உள்ளேன். அதாவது உங்களுடைய தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுமாறு கேட்டால் நீங்கள் அதை செய்ய வேண்டும். அதே சமயம் என்சிஏவில் கொடுக்கப்படும் ஆலோசனைப்படி வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத வீரர்களை நாங்கள் வற்புறுத்த மாட்டோம்”

இதையும் படிங்க: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கையால் டெஸ்ட் அறிமுக தொப்பியை பெற்ற துருவ் ஜுரேல் – பின்னணி என்ன தெரியுமா?

“ஆனால் ஃபிட்டாக இளமையுடன் உள்ளவர்கள் உள்ளூர் போட்டிகளை புறக்கணிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. இது அனைத்து மத்திய ஒப்பந்த வீரர்களுக்கானது. எனவே அனைவரும் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும். இல்லையென்றால் தேர்வுக்குழு தலைவர் கொடுக்கும் ஆலோசனையை நான் ஏற்றுக் கொள்வேன். அதன் பின் அவர்கள் அந்த வீரர்கள் மீது சுதந்திரமாக நடவடிக்கை எடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement