ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலத்தை முடிவுசெய்யப்போகும் மீட்டிங் – ஜெய் ஷா எடுப்பதுதான் முடிவாம்

Jay-shah
- Advertisement -

சமீபத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று நாடு திரும்பியது. அதனை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்புவது தான் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடிய அவர்கள் இருவரும் அதனை தொடர்ந்து எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அவர்கள் இருவரும் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை அணியில் சேர்க்க வேண்டிய நிலைக்கு பிசிசிஐ தள்ளபட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே இளம் வீரர்களைக் கொண்டு இந்த முறை டி20 உலக கோப்பைக்கு செல்லலாம் என்று பிசிசிஐ முடிவெடுத்து இருந்ததால் தற்போது சீனியர் வீரர்களாகிய இவர்களை எப்படி அணியில் இணைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முக்கிய முடிவினை எடுக்கும் மீட்டிங் இன்று பிசிசிஐ சார்பில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நியாயமான சாம்பியனை தீர்மானிக்க.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை அப்படி நடத்துங்க.. ஐசிசிக்கு அஸ்வின் கோரிக்கை

இதில் தேர்வுக்குழு உறுப்பினர்கள், பி.சி.சி.ஐ முக்கிய நிர்வாகிகள் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த மீட்டிங்கில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலத்தை குறித்து முக்கிய முடிவை செயலாளர் ஜெய் ஷா எடுப்பார் என்றும் அந்த முடிவின் அடிப்படையிலேயே ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோரது எதிர்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement