நியாயமான சாம்பியனை தீர்மானிக்க.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை அப்படி நடத்துங்க.. ஐசிசிக்கு அஸ்வின் கோரிக்கை

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 கழித்து இந்தியா சமன் செய்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற இத்தொடரை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாட உள்ளது.

அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ள இந்தியா டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் எப்படியும் கணிசமான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு 3வது முறையாக தகுதி பெறும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் ஐடியா:
ஏனெனில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற உலகின் போன்ற மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா மட்டுமே இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு (2021, 2023) தகுதி பெற்ற ஒரே அணியாக சாதனை படைத்துள்ளது. ஆனாலும் அந்த 2 போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியனை ஒரு ஃபைனல் மட்டும் வைத்து முடிவு செய்யாமல் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை வைத்து தீர்மானிக்க வேண்டும் என ஐசிசிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நாங்கள் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் தோல்வியை சந்தித்தோம் என்பதை மனதார ஏற்றுக்கொள்கிறேன்”

- Advertisement -

“ஆனால் அது டெஸ்ட் தொடராக இருந்தால் எப்போதும் கம்பேக் கொடுப்பதற்கு சாத்தியம் உள்ளது. எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடராக நடைபெறுமா? அதற்கான நேரம் இருக்குமா? என்பதை ஐசிசி தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஃபைனலில் தோல்வியை சந்தித்த பின் ஒரு போட்டிக்கு பதிலாக 3 போட்டிகள் கொண்ட தொடரை நடத்தி டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: 274 ரன்ஸ் சேசிங்கில் எஸ்கேப்பான ஜிம்பாப்வே.. அசத்திய இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம்

இருப்பினும் தொடரின் கடைசியில் நடைபெறும் ஒரு போட்டியில் யார் அசத்துகிறார்கள் என்பதை தீர்மானிப்பதற்காகவே ஃபைனலில் வெல்லும் அணிக்கு கோப்பை கொடுக்கப்படுகிறது. எனவே இந்த ஆலோசனைக்கு சுனில் கவாஸ்கர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதனால் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை வருங்காலங்களில் ஐசிசி நடத்தும் என்பது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Advertisement