274 ரன்ஸ் சேசிங்கில் எஸ்கேப்பான ஜிம்பாப்வே.. அசத்திய இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம்

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஜிம்பாப்வே அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2023 உலகக் கோப்பையில் 55 ரன்களுக்கு இந்தியாவிடம் சுருண்டு படுதோல்வியை சந்தித்ததால் ஏமாற்றமடைந்த இலங்கை அரசு தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அறிவித்தது. அதன் பின் அரசு தலையிட்டதால் விதிமுறைகளை மீறிய இலங்கை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்தது.

இருப்பினும் மீண்டும் வாரியத்தை சீர்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை எடுத்துள்ளது. அதன் காரணமாக இருதரப்பு தொடர்களில் இலங்கை விளையாடலாம் என்று ஐசிசி அறிவித்திருந்தது. அந்த வகையில் தடைக்குப்பின் முதல் முறையாக இலங்கை அணி விளையாடும் இந்த தொடர் அந்நாட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இலங்கைக்கு ஏமாற்றம்:
இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 6ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 273/9 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அவிஷ்கா பெர்னாண்டோ டக் அவுட்டானாலும் கேப்டன் குஷால் மெண்டிஸ் 46, சமரவிக்ரமா 42, ஜனித் லியனகே 24 ரன்கள் அடித்து ஓரளவு நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள்.

அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா ஜிம்பாப்வே பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய அவர் 5 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 (95) ரன்கள் விளாசி அவுட்டானார். இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய நிலையில் ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட் ங்கரவா, முசர்பாணி, பாரஸ் அக்ரம் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 274 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க வீரர் குமுன்ஹுகம்வேவை டக் அவுட்டாகிய தில்சன் மதுசங்கா அடுத்ததாக வந்த கேப்டன் கிரைக் எர்வினையின் டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார். அதனால் 5/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற ஜிம்பாப்வேவை மற்றொரு துவக்க வீரர் கைடனோ 1*, மில்டன் சும்பா 2* ரன்கள் எடுத்து காப்பாற்ற போராடினர்.

இதையும் படிங்க: திரும்புன பக்கமெல்லாம் போட்டிக்கு வர்ரதே வேலையா போச்சு.. ஆஸி மீது வெறுப்பில் இந்திய ரசிகர்கள்

ஆனால் அப்போது திடீரென வந்த மழை வெளுத்து வாங்கி 1 – 2 மணி நேரங்கள் போட்டியில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதனால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அந்த வகையில் 12/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறிய ஜிம்பாப்வே இந்த போட்டியில் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து மழையால் தப்பியது என்றே சொல்லலாம். மறுபுறம் தடைக்கு பின் விளையாடிய முதல் போட்டியே மழையால் ரத்து செய்யப்பட்டதால் இலங்கை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது.

Advertisement