திரும்புன பக்கமெல்லாம் போட்டிக்கு வர்ரதே வேலையா போச்சு.. ஆஸி மீது வெறுப்பில் இந்திய ரசிகர்கள்

IND vs AUS 22
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 1 – 1 (2) என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

அதனால் 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்த ஆறுதலுடன் இந்தியா நாடு திரும்பியுள்ளது. முன்னதாக இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இந்தியா முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் 5வது இடத்திற்கு சரித்தது. போதாகுறைக்கு மெதுவாக பந்து வீசியதற்காக 2 புள்ளிகளை ஐசிசி கழித்ததால் மீண்டும் இந்தியா 6வது இடத்திற்கு சரிந்தது.

- Advertisement -

முதலிடத்தில் ஆஸ்திரேலியா:
ஆனால் 2வது போட்டியில் அபாரமாக விளையாடி அதிரடியான வெற்றி பெற்றதால் மீண்டும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை முந்திய இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

அதனால் தென்னாப்பிரிக்காவிடம் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியாவை ஐசிசி தரவரிசையில் பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலியா ஜனவரி 5ஆம் தேதி உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் ஜனவரி 6ஆம் தேதி நிறைவு பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலியா 3 – 0 என்ற கணத்தில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.

- Advertisement -

அதனால் 55.26% புள்ளிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தற்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலிலும் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அதன் காரணமாக 54.16% புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திற்கு சரிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் தலா 50% புள்ளிகளுடன் 3, 4, 5வது இடங்களிலும் பாகிஸ்தான் 36.66% 6வது இடத்திற்கும் சரிந்துள்ளது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?- தாமதம் ஏன்?

அந்த வகையில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் தோல்வியை கொடுத்து கோப்பையை ஆஸ்திரேலியா பறித்த போது குறைந்தபட்சம் தரவரிசையிலாவது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறோம் என்பது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் தற்போது அதையும் பறித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் முந்தியுள்ள ஆஸ்திரேலியா எங்கே போனாலும் போட்டிக்கு வருவதால் இந்திய ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

Advertisement