2024 டி20 உ.கோ அதிகம்.. தெ.ஆ சீரிஸ் முடிஞ்சதும் அவரோட பதவி காலம் பற்றி முடிவு பண்ணிருவோம்.. ஜெய் ஷா அறிவிப்பு

Jay Shah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் பொறுப்பேற்றார். ஒரு வீரராக சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் சோதனை என்ற பெயரில் அணியில் அடிக்கடி அவர் செய்த மாற்றங்கள் ரசிகர்களிடம் நிறைய அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதற்கேற்றார் போல் அவர் பயிற்சியாளராக தலைமை தாங்கிய 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், 2023 உலக கோப்பை ஆகிய 4 முக்கியமான பெரிய தொடர்களில் இந்தியா நாக் அவுட் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. சொல்லப்போனால் 2023 ஆசிய கோப்பை மட்டுமே அவர் தலைமையில் இந்தியா பதிவு செய்த நல்ல வெற்றியாக அமைந்தது.

- Advertisement -

ஜெய் ஷா பதில்:
அதனால் 2023 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட் பதவி காலம் நிறைவடைந்த போது இத்தோடு உங்களுடைய சேவை போதும் என்பதே நிறைய ரசிகர்களின் கருத்துக்களாக இருந்தது. அந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிந்து விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் ராகுல் டிராவிட் தலைமையில் ஏற்கனவே இருந்த பயிற்சியாளர் குழுவினர் மீண்டும் தொடர்வார்கள் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும் அந்த அறிவிப்பில் புதிய பதவி காலத்தின் அளவு பற்றி என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று செய்திகள் வலம் வந்தன.

- Advertisement -

இந்நிலையில் விரைவில் துவங்க உள்ள தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்ததும் ராகுல் டிராவிட் பகுதி காலம் பற்றிய இறுதிக்கட்ட முடிவை எடுக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது பற்றி மும்பையில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “தென்னாபிரிக்காவில் நடைபெறும் தொடர்களை முடித்துக் கொண்டு இந்திய அணி நாடு திரும்பியதும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலத்தின் நீளம் பற்றிய இறுதி முடிவை எடுக்க உள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: லெஜெண்ட்ஸ் லீக் 2023 : 187 ரன்ஸ்.. பின்னி போராட்டம் வீண்.. ரெய்னா அணியை சாய்த்த ஹர்பஜன் அணி சாம்பியன்

இதிலிருந்து எப்படியும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் டிராவிட் பயிற்சியாளராக தொடர்வது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அந்த உலகக் கோபையிலும் இந்தியா தோற்கும் பட்சத்தில் கண்டிப்பாக அவர் பயிற்சியாளராக நீடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement