சச்சின், அமிதாப் பச்சனை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு பி.சி.சி.ஐ யின் மூலம் கிடைத்த கவுரவம் – ஜெய் ஷா நேரில் சந்திப்பு

Jay-Shah
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசியின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த வேளையில் பயிற்சிக்காக தயாராக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ கடந்த பல முறைகளையும் தாண்டி இம்முறை பிரம்மாண்டமாக உலக கோப்பை தொடரினை நடத்த வேண்டும் என்பதன் காரணமாக முன்கூட்டியே சில ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலருக்கும் கோல்டன் டிக்கெட்டினை வழங்கி அதன் மூலம் அனைத்து போட்டிகளையும் வி.ஐ.பி ஸ்டேண்டில் காணும் வசதியை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே சச்சின் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்ட வேளையில் தற்போது தென்னிந்திய நடிகரும், தமிழக சூப்பர் ஸ்டாருமான ரஜினி காந்திற்கு கோல்டன் டிக்கெட்டினை பி.சி.சி.ஐ யின் செயலாளர் ஜெயிஷா நேரில் சந்தித்து அவரது இல்லத்தில் வழங்கி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்த அதிகாரபூர்வ பதிவையும் ஜெய்ஷா அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கியதில் மகிழ்ச்சி என்று பதிவு செய்துள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் 2023 தொடரில் இந்திய அணியின் அட்டவணை.. பாகிஸ்தானுடன் மோதல் இருக்கா? எந்த சேனலில் பார்க்கலாம்

இந்த கோல்டன் டிக்கெட்டினை பெறும் நட்சத்திரங்கள் பலரும் இந்த ஆண்டு நடைபெறும் உலககோப்பை போட்டிகளை நேரில் அனைத்து வசதிகளுடன் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது,

Advertisement