ஏசியன் கேம்ஸ் 2023 தொடரில் இந்திய அணியின் அட்டவணை.. பாகிஸ்தானுடன் மோதல் இருக்கா? எந்த சேனலில் பார்க்கலாம்

Asian Games 2023
- Advertisement -

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாகவே தடகளம் போன்ற விளையாட்டுகள் நடைபெறும் இந்த தொடரில் 2014க்குப்பின் முதல் முறையாக கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதால் ருதுராஜ் கைக்கவாட் தலைமையிலான இளம் அணி இத்தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் ஐசிசி தரவரிசையில் டாப் அணிகளாக இருப்பதால் நேரடியாக காலிறுதி சுற்றில் விளையாடும் என்று ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த நிலைமையில் மலேசியா, இந்தோனேசியா போன்ற அணிகள் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை முதல் லீக் சுற்றில் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை:
அதை தொடர்ந்து இந்த தொடரில் முக்கியமான காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் இந்தியா தம்முடைய காலிறுதி போட்டியில் அக்டோபர் 3ஆம் தேதி விளையாட உள்ளது. அப்போட்டியில் வெற்றி பெற்றால் 4வது காலிறுதி போட்டியில் வங்கதேசம் அல்லது ஹாங்காங் ஆகிய அணிகளில் வெல்லும் அணியுடன் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் இந்தியா வரும் அக்டோபர் 6ஆம் தேதி மோதும்.

அதனால் இந்தியா ஃபைனலில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் அரையிறுதி போட்டியில் வெல்லும் பட்சத்தில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக விளையாடும் வாய்ப்பை இந்தியா பெறும். 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான அட்டவணை (இந்திய நேரம்):
காலிறுதி சுற்று:
1. அக்டோபர் 3, அதிகாலை 6.30 மணி : இந்தியா – லீக் சுற்றில் வெல்லும் 1வது அணி
2. அக்டோபர் 3, முற்பகல் 11.30 மணி : பாகிஸ்தான் – லீக் சுற்றில் வெல்லும் 2வது அணி
3. அக்டோபர் 4, அதிகாலை 6.30 மணி : இலங்கை – லீக் சுற்றில் வெல்லும் 3வது அணி
4. அக்டோபர் 4, முற்பகல் 11.30 மணி : வங்கதேசம் – லீக் சுற்றில் வெல்லும் 4வது அணி

- Advertisement -

அரையிறுதி சுற்று:
செமி ஃபைனல் 1 : அக்டோபர் 6, அதிகாலை 6.30 மணி : காலிறுதி 1 வெற்றியாளர் – காலிறுதி 4 வெற்றியாளர்
செமி ஃபைனல் 2 : அக்டோபர் 6, முற்பகல் 11.30 மணி : காலிறுதி 2 வெற்றியாளர் – காலிறுதி 3 வெற்றியாளர்

அக்டோபர் 7, அதிகாலை 6.30 மணி : வெண்கல பதக்க போட்டி
அக்டோபர் 7, முற்பகல் 11.30 மணி : தங்கப்பதக்க போட்டி (ஃபைனல்)

இதையும் படிங்க: இந்திய அணியில் ஷமி பெஞ்சில் இருக்காரு.. நீங்க இப்டியே இருந்தா அக்டோபர் 14இல் செஞ்சு விட்ருவாங்க – பாக் அணியை எச்சரித்த அக்மல்

இத்தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கலாம். அதே போல சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாகவும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement