இனிமே ஜென்ஸ் லேடிஸ்ன்னு எல்லாம் கணக்கில்ல – ஜெய் ஷா அறிவித்த உருப்படியான சலுகை (ரசிகர்கள் வரவேற்பு)

Jay-Shah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் சவுரவ் கங்குலி வெளியேறியதை அடுத்து தற்போது ரோஜர் பின்னி தலைமையில் பிசிசிஐ-யின் புதிய நிர்வாகமானது செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலின் போது ஏற்கனவே பிசிசிஐ-யின் செயலாளராக பதவி வகித்து வந்த ஜெய்ஷா அதே பதவியில் மீண்டும் நீடிப்பதாக முடிவு ஒருமனதாக அனைவராலும் முடிவு செய்யப்பட்டது.

Deepak Chahar IND

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது புதிய தலைமையிலான பிசிசிஐ நிர்வாகத்தின் முதல் நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தைக் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி, இளையோர் கிரிக்கெட் அணி ஆகிய அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிர்வகித்து வருகிறது.

அதன்படி இதுவரை இந்தியாவில் ஆண்கள் அணிக்கு ஊதியம் அதிகமாகவும், பெண்கள் அணிக்கு ஊதியம் குறைவாகவும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் :

Indian Womens Harmanpreet Kaur Shafali Varma

இனி ஆடவர் மற்றும் மகளிர் அணி என அனைவருக்குமே ஒரே மாதிரியான ஊதியம் தான் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பேசிய பி.சிசி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில் : இனி இந்திய மகளிர் அணிக்கும் ஆண்கள் அணிக்கு நிகராக ஊதியம் வழங்கப்படும்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு 15 லட்சமும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு 6 லட்சமும், டி20 ஆட்டங்களுக்கு ஒரு போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். பாலின பாகுபாடுகளை கடந்து செய்யும் முதல் நடவடிக்கையாக இந்த ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 தரவரிசை : பாகிஸ்தானை பந்தாடி முன்னேற்றத்தை கண்ட கிங் கோலி – எத்தனையாவது இடம் தெரியுமா?

பிசிசிஐ-யின் செயலாளரான இவர் மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் வேளையில் முதல் முறையாக இப்படி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்களும் இந்த ஒரே ஊதிய திட்டத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement