டி20 தரவரிசை : பாகிஸ்தானை பந்தாடி முன்னேற்றத்தை கண்ட கிங் கோலி – எத்தனையாவது இடம் தெரியுமா?

Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாகவே மூன்று வகையான ஐசிசி தரவரிசை பட்டியலிலும் டாப் 10-க்குள் கட்டாயம் இடம் பெறும் வீரராக இருந்து வந்தார். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக அவருக்கு ஏற்பட்ட பார்ம் சறுக்கல் காரணமாக டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10-லிருந்து வெளியேறிய விராட் கோலி மீண்டும் விட்ட இடத்தை பிடித்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Virat Kohli 1

- Advertisement -

அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளாகவே ஃபார்ம் இன்றி தவித்து வந்த விராத் கோலி சிறிய ஓய்வினை எடுத்துக்கொண்டு அதன் பிறகு மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் அணிக்கு திரும்பியிருந்தார். அப்படி அணிக்கு கம்பேக் கொடுத்த விராட் கோலி ஆசியக்கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அசத்தலான சதத்தினை விளாசி சாதனை படைத்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கினை தனிநபராக விராட் கோலி வழங்கி வருகிறார்,

Rankings

குறிப்பாக இந்த உலககோப்பை தொடரை அசத்தலான பார்மில் துவங்கிய அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த போட்டியில் 82 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 62 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பிறகு தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் அவர் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார். அந்த வகையில் பேட்டிங் தரவரிசையில் தற்போது 635 புள்ளிகளுடன் அவர் மீண்டும் டாப் 10-ற்குள் நுழைந்து ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : INDvsNED : எந்த பக்கம் போட்டாலும் அடிக்குறாரு. அவருக்கு பந்துவீசுறது ரொம்ப கஷ்டம் – நெதர்லாந்து வீரர் புலம்பல்

இந்த பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், இரண்டாவது இடத்தில் டேவான் கான்வேவும் இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தற்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் இன்னும் சில இடங்களை தாண்டி டாப் 5-க்குள் வரவும் அதிகமான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement