INDvsNED : எந்த பக்கம் போட்டாலும் அடிக்குறாரு. அவருக்கு பந்துவீசுறது ரொம்ப கஷ்டம் – நெதர்லாந்து வீரர் புலம்பல்

Paul-Van-Meekeren
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்திய அணியானது தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவதாக நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

- Advertisement -

இந்நிலையில் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியரது அரைசதம் காரணமாக 20 ஓவர்களின் வடிவில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 179 ரன்களை குவித்தது.

பின்னர் 180 நாட்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விராட் கோலி 62 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூரியகுமார் யாதவ் 51 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Suryakumar YAdav

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான சூரிய குமார் யாதவுக்கு எதிராக பந்து வீசியது மிகக் கடினமாக இருந்ததாக நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரரான பால் வான் மெக்கீரன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சூரியகுமார் யாதவ் எவ்வளவு சிறப்பான வீரர் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த ஓராண்டாகவே அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டை பார்த்து மிகவும் பிரமித்து போய் உள்ளோம். எங்கள் அணிக்கு எதிராகவும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைத்தோம். அதேபோன்று அவர் எங்கள் அணிக்கு எதிராக சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : INDvsNED : சில சமயம் நான் பேசறதே கேக்கல. தோல்விக்கு பிறகு நெதர்லாந்து கேப்டன் பேசியது என்ன?

எந்த பக்கம் நாங்கள் பந்து வீசினாலும் அவரால் அதற்கு ஏற்றார் போல் விளையாட முடிகிறது. அதுமட்டும் இன்றி சூரியகுமார் யாதவ் மிகச் சிறிய அளவிலேயே தவறுகளை செய்கிறார். அதனால் அவரை அவுட் ஆக்குவதும் மிகக் கடினமாக உள்ளது என நெதர்லாந்து வீரர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement