என்னா மனுஷன்யா.. இலங்கை மைதான பராமரிப்பாளர்களுக்கு ஜெய் ஷா அறிவித்த மெகா பரிசு தொகை.. ரசிகர்கள் பாராட்டு

Jay Shah
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நிறைய பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்தலாக செயல்பட்ட நடப்பு சாம்பியன் இலங்கையை அதனுடைய சொந்த ஊரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. குறிப்பாக கொழும்புவில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நெருப்பாக செயல்பட்ட இந்தியாவின் பந்து வீச்சில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி போட்டியை மாற்றிய முகமது சிராஜ் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 51 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 23*, சுப்மன் கில் 27* ரன்கள் எடுத்து 6.1 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

உழைப்புக்கு பரிசு:
அதனால் 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி இலங்கை (6) பாகிஸ்தான் (2) போன்ற அணிகளால் தொட முடியாத அளவுக்கு ஆசிய கண்டத்தின் வெற்றிகரமான அணியாக சரித்திரம் படைத்துள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாரியங்களுக்கு இடையேயான மோதலால் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்தது. ஆனால் அங்கு தற்போது மழைக்காலம் என்பதால் ஆரம்பம் முதலே இலங்கையில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் மழை 10 நிமிடங்கள் ஓய்ந்தால் கூட அதற்குள் மைதானத்துக்குள் இருக்கும் தண்ணீரை அகற்றி உடனடியாக போட்டியை மீண்டும் துவக்கும் அளவுக்கு கண்டி மற்றும் கொழும்பு மைதானப் பராமரிப்பாளர்கள் தீயாக வேலை செய்தனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலான போட்டிகள் நடைபெற்ற கொழும்பு மைதானத்தில் பிட்ச்சை மின் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளால் மைதான பராமரிப்பாளர்கள் உலர வைத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

மொத்தத்தில் அடிக்கடி மழை வந்தாலும் இத்தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய இலங்கை மற்றும் கண்டி மைதான பராமரிப்பாளர்களை அஸ்வின் போன்ற நட்சத்திர வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வந்தனர். சொல்லப்போனால் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற முகமது சிராஜ் அதற்கான பரிசு தொகையை கொழும்பு மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுப்பதாக அறிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: IND vs SL : சரவெடி வேகத்தில் சேசிங்.. ஆஸியின் 20 வருட சாதனையை தகர்த்த இந்தியா.. இலங்கையையும் முந்தி 2 புதிய உலக சாதனை

இந்நிலையில் மழையையும் தாண்டி இத்தொடர் வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய கண்டி மற்றும் கொழும்பு மைதான பராமரிப்பாளர்களுக்கு ஆசிய கவுன்சில் சார்பில் 50000 அமெரிக்க டாலர்கள் பரிசாக கொடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இலங்கையில் இத்தொடரை நடத்தியதால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்த அவரை இப்போது சுமார் 42 லட்சம் மதிப்பிலான பரிசு தொகையை கொடுத்துள்ளதால் “என்னா மனுஷன்யா” என்று நிறைய ரசிகர்கள் பாராட்டுவதை பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

Advertisement