ஐசிசி 2023 உலக கோப்பை அட்டவணை, மைதானங்கள் வெளியாகும் தேதி எப்போது? ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பு இதோ

Jay-Shah
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியன் இந்த உலகக் கோப்பையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஐபிஎல் உட்பட எத்தனை டி20 தொடர்கள் வந்தாலும் இன்னும் ரசிகர்களிடம் தனித்துவமான மவுசும் தரமும் கொண்டுள்ள இந்த உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா நடத்தியது.

worldcup

- Advertisement -

அதன் காரணமாக தற்போது இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாட்டு அணிகள் பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் பார்க்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதற்காக தேவையான முடிவுகளை எடுப்பதற்காக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் மே 28ஆம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த உலகக் கோப்பை நடைபெறும் தேதிகள், மைதானங்கள் கட்டுப்பாடுகள் போன்ற முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அட்டவணை எப்போது:
அந்த கூட்டத்தின் முடிவில் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வமான அட்டவணை மற்றும் மைதானங்கள் பற்றிய அறிவிப்பு வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் போது அறிவிக்கப்படும் என ஜெய் ஷா அறிவித்துள்ளார். மேலும் இந்தியா முழுவதிலும் இருக்கும் முக்கியமான மெட்ரோ நகரங்களுக்கு இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Jay-shah

“ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனல் நடைபெறும் போது செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக 2023 ஐசிசி உலக கோப்பைக்கான மைதானங்கள் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். அதே நாளில் முழுமையான அட்டவணையும் வெளியிடப்படும். அதே சமயம் 2023 ஆசிய கோப்பை பற்றிய இறுதி முடிவு ஆசிய கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் விவாதித்த பின் எடுக்கப்படும். உலக கோப்பையை பொறுத்த வரை ஒவ்வொரு மைதானத்திற்கும் ஒரு மாநில நிர்வாகி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் மெட்ரோ நகரங்களில் இருக்கும் மைதானங்களை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -

முன்னதாக ஏற்கனவே வெளியான செய்திகளின்படி வரும் அக்டோபர் 5 முதல் 19ஆம் தேதி வரை 2023 உலக கோப்பை மொத்தம் 46 நாட்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் ஃபைனல் உட்பட மொத்தம் 48 போட்டிகளில் உலகின் டாப் அணிகள் கோப்பைக்காக மோத உள்ளன. இந்த உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் போட்டியுடன் அகமதாபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. அத்துடன் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் எதிர்கொள்ள உள்ளது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

அதை விட அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கடந்த ஃபைனலை நடத்திய மும்பை வான்கடே மைதானத்தில் இம்முறை ஒரு செமி ஃபைனல் மட்டுமே நடைபெற உள்ளது. இறுதியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் இறுதி போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, கௌஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை, திருவனந்தபுரம், நாக்பூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:IPL 2023 : மழை வந்ததால சிஎஸ்கே தப்பிச்சு கப் வாங்கிடுச்சு – முன்னாள் இந்திய வீரரின் கருத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கில்லியாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2011க்குப்பின் கோப்பையை வெல்லுமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement