IPL 2023 : மழை வந்ததால சிஎஸ்கே தப்பிச்சு கப் வாங்கிடுச்சு – முன்னாள் இந்திய வீரரின் கருத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

ipl-finals
- Advertisement -

பரபரப்பான போட்டிகளுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதங்களாக மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை 5வது கோப்பையை வென்றது. மழையால் ரிசவர் நாளில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் குவித்த அதிரடியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெய்த மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தும் கடைசி ஓவரில் மோகித் சர்மா துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி மிகப்பெரிய சவாலை கொடுத்தார். இருப்பினும் கடைசி 2 பந்துகளில் ஒரு சில இன்ச்கள் அவர் தவற விட்ட யார்க்கர் பந்துகளை சிக்ஸறாகவும் பவுண்டரியாகவும் பறக்க விட்ட ரவீந்திர ஜடேஜா 15* (9) ரன்களை விளாசி பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

மழையால் தப்பிச்சுட்டீங்க:
அதனால் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தும் சொந்த மண்ணில் குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் போராடி த்ரில் வெற்றி பெற்ற சென்னை ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. முன்னதாக இப்போட்டியில் 214 ரன்கள் குவித்த குஜராத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அந்த சூழ்நிலையில் பொதுவாக மாபெரும் அழுத்தம் நிறைந்த ஃபைனலில் வெறும் 130 ரன்களை சேசிங் செய்வது மிகப்பெரிய சவாலான காரியமாகும்.

அப்படிப்பட்ட நிலையில் மழை வந்ததால் 15 ஓவரில் 171 ரன்களாக இலக்கு மாற்றப்பட்டது சென்னைக்கு சாதகமாக அமைந்தது. அதே சமயம் ஷமி, ரசித் கான் போன்ற முக்கிய பவுலர்கள் ஈரமான பந்தை சரியாக பிடித்து வீச தடுமாறினார்கள். இந்நிலையில் அந்த ஃபைனலில் மழை வந்ததால் சென்னைக்கு மிகப்பெரிய சாதகம் அமைந்து வெற்றி பெற்று விட்டதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார். அதற்கான காரணத்தை அவர் விவரித்து அவர் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மழையால் பாதிக்கப்பட்ட ஃபைனலில் சென்னை தங்களுடைய பேட்டிங்கை ஷமியின் பந்து வீச்சில் துவங்கியது. ஆனால் அதன் பின் மழை வந்ததால் ரசித் கான், மோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய வழக்கமான முழுமையான 4 ஓவரில் ஒரு ஓவரை இழந்தனர். அதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் பவுலர்களுக்கு 18 பந்துகளில் எந்த விக்கெட்டையும் எடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போனது. அது நிச்சயமாக சென்னையின் வெற்றியில் சாதகமாக விளையாடியது” என்று கூறினார்.

ஆனால் அதைப் பார்க்கும் சென்னை ரசிகர்கள் இந்த சீசனில் சிறந்த பவுலிங் கொண்ட குஜராத்துக்கு எதிராக மாபெரும் ஃபைனலில் 15 ஓவரில் 171 ரன்களை 11.40 என்ற ரன்ரேட்டில் எளிதாக சேசிங் செய்து விட முடியும் என்று சொல்லும் நீங்கள் உண்மையாகவே வல்லுனர் தானா? என்று பதிலடி கொடுக்கின்றனர். அத்துடன் குஜராத் பவுலர்கள் 18 பந்துகள் இழந்ததாக கூறும் நீங்கள் சென்னை பேட்ஸ்மேன்கள் 6 ஓவருக்கு பதிலாக 4 பவர் பிளே ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டதால் 12 பந்துகளை இழந்ததை ஏன் பேசவில்லை? என்றும் ரசிகர்கள் கேட்கின்றனர்.

இதையும் படிங்க:சி.எஸ்.கே அணி சாம்பியன் பட்டம் வென்றதும் ஜடேஜா இன்ஸ்டாகிராமில் செய்துள்ள மாற்றம் – இனி சென்னையை விட்டு போவமாட்டாரு

அத்துடன் ஷமி 30, ரசித் கான் 44, மோஹித் சர்மா 36 என குஜராத்தின் டாப் 3 பவுலர்கள் 3 ஓவரில் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை கொடுத்தனர். அப்படியானால் அவர்கள் முழுமையாக 4 ஓவர்கள் வீசியிருந்தால் 19 ஓவரிலேயே சென்னை 215 ரன்களை சேசிங் செய்திருக்கும் என்றும் தெரிவிக்கும் ரசிகர்கள் பாராட்ட மனமில்லை என்றாலும் இப்படி விமர்சிக்காதீர்கள் என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement