இந்தியா நேபாள் அணிக்கெதிரான போட்டியின் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – ஜவகல் ஸ்ரீநாத்

Javagal-Srinath
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜவஹல் ஸ்ரீநாத் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 236 விக்கெட்டுகளையும், 229 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 315 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் கடைசியாக 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடி இருந்தார்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ஐசிசி-யின் மேட்ச் ரெப்ரி பதவியில் இணைந்தார். அந்த வகையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ஐசிசி யின் நிர்வாகியாக பயணித்து வரும் அவர் செப்டம்பர் நான்காம் தேதி இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் மேட்ச் ரெப்ரியாக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஐ.சி.சி யின் அதிகாரியாக மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் இந்தியா நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டி அவர் மேட்ச் ரெப்ரியாக பணியாற்றவுள்ள 250 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

இதுவரை ஐசிசி-யின் மூலம் 250 ஒருநாள் போட்டிகளில் மேட்ச் ரெப்ரியாக மூன்று வீரர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அந்த வகையில் ரஞ்சன் மதுகளே, கிரிஸ் பிராட் மற்றும் ஜெப் க்ரூ ஆகிய மூவர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தி இருந்த வேலையில் தற்போது நான்காவது நபராக ஸ்ரீநாத் இந்த பட்டியலில் இணையவுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசி அவர் கூறுகையில் : நான் மேட்ச் ரெப்ரியாக பணியாற்றி வருவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக நம்ப முடியாத வகையில் கிரிக்கெட் தொடர்பான பணியிலேயே பயணித்து வருகிறேன். குறிப்பாக 2006 ஆம் ஆண்டு நான் மேட்ச் ரெப்ரியாக அறிமுகமான போட்டியிலிருந்து தற்போது வரை அனைத்து போட்டியுமே என் ஞாபகத்திற்கு இருக்கின்றன.

இதையும் படிங்க : இப்டியா கேப்டன்ஷிப் செய்வீங்க? இந்தியாவுக்கு சவாலை கொடுத்தும் பாபர் அசாமை தாக்கிய சோயப் அக்தர் – காரணம் என்ன

எனக்கான இந்த வாய்ப்பை வழங்கிய ஐசிசி மற்றும் பிசிசிஐ மற்றும் என்னுடன் பணியாற்றி வரும் சக ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி என ஸ்ரீநாத் தெரிவித்திருந்தார். 2006 முதல் தற்போது வரை பல்வேறு ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக மேட்ச் ரெப்ரியாக ஸ்ரீநாத் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement