ஜஸ்ப்ரீத் பும்ரா குணமடைந்து வர இத்தனை மாதங்கள் ஆகுமாம் – சரியா போச்சு போங்க (கெட்ட காலம் தான்)

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வந்த வேளையில் தற்போது எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

Bumrah

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் விளையாடாத அவர் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார். பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்திற்காக திருவனந்தபுரம் சென்றிருந்த அவர் அங்கு நடைபெற்ற வலை பயிற்சியின்போது முதுகில் அசவுகரியத்தை உணர்ந்ததாக அணி மருத்துவர்களிடம் தெரிவித்து இருந்தார்.

அதன்படி அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கையில் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த காயம் குணமடைய சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதனாலும் அவர் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற உறுதியான தகவல்கள் இன்று வெளியானது. பும்ரா உலக கோப்பையில் விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் வேளையில் அவர் காயம் குணமடைய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்கிற தகவல் வெளியாகி தற்போது ரசிகர்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Bumrah 1

அதன்படி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : பும்ராவின் காயம் தற்போது பிரச்சனையான அளவில் உள்ளதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை என்றாலும் அவரது காயம் குணமடைய நான்கு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என்பதனால் டி20 உலக கோப்பையை தவற விடுகிறார் என்று தெரிவித்தார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் வரை அதாவது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னர் வரை அவர் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கும் அவர் அங்கே பயிற்சி மேற்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான அதிரடி : டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்ட – சூரியகுமார் யாதவ்

அதன் பிறகு மார்ச் மாதம் தான் அவர் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவரது காயம் மார்ச் மாதத்தை தாண்டியும் நீடிக்கும் வேளையில் கிட்டத்தட்ட அவர் ஒரு ஆண்டு இந்திய அணியில் விளையாட முடியாத சூழல் கூட ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement