இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நேற்று ஆகஸ்ட் 18-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்து. அதன்படி முதலில் விளையாடிய அயர்லாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளையே இழந்து 139 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்க இந்திய அணியானது 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்திருந்த வேளையில் போட்டி மழையால் தடைபட்டது.
இதனால் இந்திய அணி டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்தும் தனது சிறப்பான செயல்பாடு குறித்தும் பேசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறுகையில் :
இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் செய்த பயிற்சிகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. என்னுடைய இந்த சிறப்பான செயல்பாடுகளுக்கு காரணமே பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாப்புகள், ஆலோசகர்கள் வழங்கிய உதவிதான். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இதையும் படிங்க : வீடியோ : கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? ஆசிய கோப்பைக்காக தீ மிதித்து அனலாக பயிற்சி எடுக்கும் வங்கதேச வீரர்
இந்த போட்டியில் டாஸ் வென்றது எங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்ததாக நினைக்கிறேன். இறுதியில் வானிலையும் எங்களுக்கு உதவியது இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இனியும் தொடர்ச்சியான என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறேன் என பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.