இங்கிலாந்து அணிக்கெதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட் எடுக்க இதுவே காரணம் – ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதலில் இன்னிங்சில் 396 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களை குவித்தார்.

அதனை தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாளில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது 171 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா 15.5 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய பும்ரா கூறுகையில் : எப்பொழுதுமே ஒரு போட்டியில் நாம் விக்கெட்டுகளை எடுக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த நமக்கு இங்கு அந்த சாதகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்.

இதையும் படிங்க : ஃபிளாட்டான பிட்ச்சில் மாஸ்.. இம்ரான் கான், சோயப் அக்தரை மிஞ்சிய பும்ரா.. 3 மாபெரும் சாதனை

நான் ஏற்கனவே பல மகத்தான இந்திய பவுலர்கள் இதே போன்ற பந்துவீச்சை வெளிப்படுத்தி பார்த்திருக்கிறேன். அதனையே இந்த போட்டியில் செய்தும் பார்த்தேன். நான் இந்த போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும்போது எனக்கு நல்ல ஹெல்ப் கிடைத்தது. அதிலும் குறிப்பாக போப் விக்கெட் விழுந்ததிலிருந்து என்னுடைய நம்பிக்கையும் அதிகரித்தது என பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement