ஃபிளாட்டான பிட்ச்சில் மாஸ்.. இம்ரான் கான், சோயப் அக்தரை மிஞ்சிய பும்ரா.. 3 மாபெரும் சாதனை

Jasprit Bumrah
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. எனவே அந்த அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 396 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே 35 ரன்கள் கூட எடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்தினர்.

இருப்பினும் அதை மறுபுறம் அபாரமாக விளையாடி சரி செய்த இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், ரீகன் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 3 விக்கெட் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்து பின்னர் நிதானமாக விளையாடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

லெஜெண்ட் பும்ரா:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை எடுத்தனர். அதன் பின் 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 2வது நாள் முடிவில் 28 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜெயிஸ்வால் 15*, ரோகித் சர்மா 13* ரன்களுடன் இருக்கும் நிலையில் இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் பிட்ச் ஃபிளாட்டாக இருந்ததால் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறினர். ஆனால் அந்த பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சிலும் தன்னுடைய லைன், லென்த் ஆகியவற்றை சரியாக பின்பற்றிய பும்ரா அபாரமான வேகத்தால் 6 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தை 253 ரன்களுக்கு சுருட்ட முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், ஓலி போப் ஆகியோரின் ஸ்டம்புகளை தெறிக்க விட்டு அவர் கிளீன் போல்டாக்கியது ரசிகர்களுக்கு கண்கொள்ளாகாட்சியாக அமைந்தது. அதை விட இந்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகள் அடிப்படையில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற அபாரமான சாதனையை பும்ரா படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (போட்டிகள்):
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 29
2. ரவீந்திர ஜடேஜா : 32
3. எரப்பள்ளி பிரசன்னா : 34
4. அனில் கும்ப்ளே :
4. ஜஸ்பிரித் பும்ரா : 34
5. ஹர்பஜன் சிங் : 35

அத்துடன் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா : 6781*
2. உமேஷ் யாதவ் : 7661
3. முகமத் ஷமி : 7755

இதையும் படிங்க: 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஏன் விளையாடவில்லை? உண்மை காரணத்தை வெளியிட்ட – பி.சி.சி.ஐ

அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகள் அடிப்படையில் 2வது அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் (போட்டிகள்):
1. வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) : 27
2. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) : 34
3. இம்ரான் கான்/சோயப் அக்தர் (பாகிஸ்தான்) : தலா 37

Advertisement